இது திட்டமிட்ட தாக்குதல்.. ஏபிவிபியை சேர்ந்தவர்கள்தான் எங்களை தாக்கினர்.. ஜேஎன்யு மாணவர் சங்க தலைவர்
Recommended Video
டெல்லி: இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷ் கோஷ் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக சபர்மதி விடுதிக்குள் நேற்று இரவு ஆயுதங்களுடன் முகமூடி அணிந்த சிலர் உள்ளே நுழைந்து விடுதியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதில் மாணவர் சங்க தலைவரான ஆயிஷ் கோஷின் மண்டை உடைந்தது. மேலும் பல மாணவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதல்
இதுகுறித்து காயமடைந்த ஆயிஷ் கோஷ் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடந்தது. இது கண்டனத்துக்குரியது.

தாக்குதல்
பல்கலைக்கழக துணை வேந்தரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும். பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அமைப்பைச் சேர்ந்தவர்கள்தான் எங்களை தாக்கினர். மேலும் ஆர் எஸ் எஸ் கொள்கைகளை பின்பற்றும் பேராசிரியர்களும் தாக்குதல் நடத்த வழிவகுத்து தந்தனர். எங்கள் மீதான தாக்குதலின் போது பெயரைச் சொல்லியே தாக்கினர்.

எதிர்பார்க்கவில்லை
பல்கலைக்கழகத்தில் 4 நாட்களாக அசாதாரண சூழல் நிலவியது. காவலாளிகளுக்கும் தாக்கியவர்களுக்கும் ஏற்கெனவே தொடர்புண்டு. கண்மூடித்தனமாக தாக்குவார்கள் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை.

காவலாளிகள்
இது ஒரு திட்டமிட்ட தாக்குதல். சபர்மதி விடுதியில் போராட தயாராக இருந்த போது தாக்கினர். ஜனநாயக வழி போராட்டம் குறித்து பேராசிரியர்கள் வலியுறுத்தினர். உருட்டுகட்டை, கிரிக்கெட் மட்டை, சுத்தியல், கம்பிகளாலும் எங்களை தாக்கினர். வன்முறையாளர்களை காவலாளிகள் யாரும் தடுக்கவில்லை என்றார்.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications