முகம் முழுக்க புன்னகை! டெல்லியில் வரவேற்ற சிறுமியை கட்டியணைத்த ஜோ பைடன்! யார் இவர்? பரவும் வீடியோ
டெல்லி: ஜி20 மாநாட்டுக்காக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன்னை வரவேற்க வந்த 12 வயது சிறுமியை கட்டியணைத்து உரையாடிய க்யூட் வீடியோ வெளியாகி பரவி வரும் நிலையில் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஆண்டு ஜி20 அமைப்பின் உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. கடந்த முறை இந்தோனேசியாவில் ஜி 20 உச்சி மாநாடு நடந்தது. அப்போது பிரதமர் மோடியிடம் தலைமை பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து டெல்லியில் நேற்று ஜி20 உச்சி மாநாடு தொடங்கியது.

இதையடுத்து நேற்று முன்தினம் முதல் பிற வெளிநாடுகளின் தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், கனடா அதிபர் ஜஸ்டின், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உள்பட பல தலைவர்கள் டெல்லியில் குவிந்தனர்.
நேற்று ‛ஒரே பூமி, ஒரே குடும்பம்' என்ற கருப்பொருளில் ஜி20 மாநாடு நடந்தது. இதில் தற்போதைய சூழலில் போர் நடவடிக்கை என்பது தேவையில்லாதது. அது ஒட்டுமொத்த உலகையும் பாதிக்கிறது. பிரச்சனைகளுக்கு பேசி தீர்வு காண வேண்டும் என உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து ‛ஒரே எதிர்காலம்' என்ற பெயரில் இன்று 2வது நாளாக ஜி20 உச்சி மாநாடு நடந்து வருகிறது. 2 நாள் ஜி 20 மாநாடு இன்றுடன் முடிவுக்கு வர உள்ளது.
இந்நிலையில் தான் டெல்லியில் வந்திறங்கிய அமெரிக்க அதிபர் ஜோ பைடனை தன்னை வரவேற்ற சிறுமிக்கு அன்போடு கட்டியணைத்தது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதோடு அந்த சிறுமி யார்? என்பது பற்றிய முக்கிய தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது ஜி20 மாநாட்டில் பங்கேற்க கடந்த வெள்ளிக்கிழமை மாலையில் ஜோ பைடன் டெல்லி வந்திறங்கினார்.
#WATCH | G-20 in India: US President Joe Biden arrives in Delhi for the G-20 Summit
— ANI (@ANI) September 8, 2023
He will hold a bilateral meeting with PM Narendra Modi today pic.twitter.com/IVWUE0ft7E
அப்போது ஜோ பைடனை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி மற்றும் மத்திய அமைச்சர் விகே சிங் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். அப்போது அவர்களுடன் சிறுமி ஒருவரும் இருந்தார். அவரும் ஜோ பைடனை வரவேற்றார். இதில் பூரித்துப்போன ஜோ பைடன் அன்பின் வெளிப்பாடாக அந்த சிறுமியை ஆரத்தழுவி வரவேற்பை ஏற்றார்.
அதோடு மட்டுமின்றி தூதர் எரிக் கார்செட்டி, மத்திய அமைச்சர் விகே சிங் உள்ளிட்டோரை காட்டிலும் அந்த சிறுமியின் கைகளை பிடித்தபடி அதிக நேரம் பேசி கொண்டிருந்தார். இதுதொடர்பான போட்டோ மற்றும் வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இதுபற்றி விசாரித்தபோது தான் அந்த சிறுமி யார்? ஜோ பைடனுக்கும், சிறுமிக்கும் இடையேயான உறவு என்ன? என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது அந்த சிறுமி இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டியின் மகள் ஆவார். அவரது பெயர் மாயா ஜுவானிடா கார்செட்டி என்பதும் தெரியவந்தது. மேலும் ஜோ பைடனை வரவேற்க முக்கிய பதவிகளில் இருப்பவர்கள் நின்ற நிலையில் சிறுமி மட்டும் தனித்துவமாக தெரிந்தார். இதில் ஈர்க்கப்பட்ட ஜோ பைடன் சிறுமியை கட்டியணைத்து அன்பை பரிமாறி வரவேற்பை ஏற்றுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
ஆளூர் ஷாநவாஸ் செய்த அயோக்கியத்தனம்.. விசிகவில் சீட் கொடுக்காதது ஏன்? கொந்தளித்த சங்க தமிழன் -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ் -
பாஜக சிட்டிங் எம்.எல்.ஏவுக்கு சீட் மறுப்பு.. தொகுதி மாறிய 2 MLAக்கள்! வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications