முற்றிலும் இந்தியராக உங்களை உணர வைக்கும்.. ஜோஷ்.. வந்தாச்சு அட்டகாசமான வீடியோ செயலி!
டெல்லி: சிறிய வீடியோக்களை பதிவேற்றம் செய்ய முற்றிலும் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட ஜோஷ் எனும் செயலி இன்று முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஜோஷ் என்ற ஹிந்தி வார்த்தைக்கு மிகுந்த ஆர்வம் என்பது பொருளாகும்.
செல்போன் உலகில் பொழுதை கழிக்க எத்தனையோ செயலிகள் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவை சீனா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் செயலிகளாகும். இந்த செயலிகளைத்தான் இத்தனை காலமாக நாம் பயன்படுத்தி வந்தோம். தங்களின் நடிப்புத் திறன், பாடும் திறனை, நடனம் ஆடும் திறன் ஆகியவற்றை வெளிக்காட்ட பயன்படுத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த செயலிகளில் பலவற்றை மத்திய அரசு தடை விதித்து விட்டது. இதனால் ஏமாற்றத்தில் மூழ்கியிருக்கும் இந்தியர்களுக்கு பெரும் உற்சாகம் தரும் வகையில் முற்றிலும் இந்தியராக நம்மை உணர வைக்கும் ஒரு அருமையான செயலி இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.. அதுதான் ஜோஷ்.
இந்தியாவின் முன்னணி செய்தி அக்ரகேட்டர் நிறுவனமான டெய்லிஹண்ட் அறிமுகப்படுத்தியுள்ள செயலிதான் ஜோஷ். கூகுள் பிளே ஸ்டோரில் இலவசமாக கிடைக்கும் இந்த செயலிக்கான கீதம் ஒன்று கடந்த 6 தினங்களுக்கு முன்னர் வெளியானது.
"ஆஜா ஆஜா ஜோஷ் மே ஆஜா..." என தொடங்கும் இந்த கீதம் வைரலானது. இந்த செயலியில் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, ஆங்கிலம், மலையாளம் உள்ளிட்ட மொழிகள் உள்ளன. உங்களது விருப்பப்பட்ட மொழியில் நீங்கள் வீடியோக்களைப் பார்த்து மகிழலாம்.
இந்த செயலியை நாம் டவுன்லோடு செய்யும் போது எந்த மொழி வேண்டுமோ அதை தேர்வு செய்து கொண்டால் அந்த மொழியின் கீழ் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை காணலாம். நாமும் பதிவேற்றம் செய்யலாம். இந்த செயலி இன்று செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஜோஷ் செயலியை தொடங்கி வைத்துப் பேசிய டெய்லிஹண்ட் நிறுவனர் வீரேந்திர குப்தா கூறுகையில் டெய்லிஹண்ட் 14 நாடுகளில் 200 மில்லியன் சப்ஸ்கிரைபர்களுடன் சிறப்பாக இயங்கி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி ஆத்மநிர்மான் பாரத் குறித்து கொரோனா காலத்தில் பேசியிருந்தார்.
எங்களை போன்ற நிறுவனங்களை அழைத்த பிரதமர் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொழுதுபோக்கு செயலியை உருவாக்குமாறு கூறினார். இது எங்கள் அனைவருக்கும் பெரும் சவாலாக அமைந்தது. 12 மொழிகளில் இந்த செயலியை நாங்கள் வடிவமைத்துள்ளோம்.
இந்த செயலி மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் டிரென்டிங்கில் உள்ள குறும் வீடியோக்களை பதிவேற்றம், பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆப்பை உருவாக்கும் போது எங்களுக்கு 3 சவால்கள் இருந்தன. டிஜிட்டல் பாரத், இந்தியாவின் பாரம்பரியம், கலாசாரத்தை மேம்படுத்துதல் உள்ளிட்ட சவால்கள் இருந்தன என்றார்.
டெய்லிஹண்ட்டின் இணை நிறுவனர் உமாங் பேடி கூறுகையில் இந்த ஜோஷ் செயலி 12 மொழிகளில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது. பிராந்திய மொழி, சிறந்த பொழுதுபோக்கு அம்சம், மிகப் பெரிய இசை தொகுப்பு, சிறந்த வடிவமைப்பாளர்கள் என ஒரு மெகா சங்கமமே இந்த ஜோஷ் ஆகும் என்றார்.
இந்தியர்களின் செயலியாக உருவெடுத்துள்ள ஜோஷ் ஆப்பை இங்கு டவுன்லோட் செய்யவும்.
சுதந்திரம் அடைந்த நாள் முதல் சுதேசி, இந்தியாவில் தயாரிப்போம், இந்திய பொருட்களையே பயன்படுத்துவோம், மேட் இன் இந்தியா என ஊக்குவிக்கப்படுவது அண்டை நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை காட்டிலும் நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக ஆகும்.
அது போல் மற்ற நாட்டினரின் செயலிகளை பயன்படுத்தாததன் மூலம் நம் நாட்டின் ரகசிய தகவல்கள் திருடப்படுவது தடுக்கப்படும். வெளிநாட்டில் கிடைக்கும் வாஷிங்டன் ஆப்பிளை காட்டிலும் நம் ஊரில் கிடைக்கும் ஊட்டி ஆப்பிளுக்கு நாம் மதிப்பு கொடுக்க வேண்டியது அவசியம்தானே!
இந்தியாவின் சுதேசி ஆப்பான ஜோஷுக்கு நாம் முழு ஆதரவை கொடுத்து நம் நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சியை பார்த்து வெளிநாட்டவர்கள் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு சாதனை படைப்போம்! இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருளை பயன்படுத்துவதில் கர்வம் கொள்வோம்!!
ஜோஷை ட்விட்டர், இன்ஸ்டா, யூடியூபில் பாலோ செய்ய கீழ்காணும் லிங்குகளை கிளிக் செய்யுங்கள்
இன்ஸ்டாகிராம்
https://instagram.com/officialjoshapp?igshid=n6jq3xgghnag
பேஸ்புக்
https://www.facebook.com/Officialjoshapp
யூ டியூப்
-
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா! -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications