“காங்கிரஸ் ஆட்சி முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது”.. ஜேபி நட்டா பரபர பேச்சு!
டெல்லி: மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியதாக மத்திய அமைச்சரும் மாநிலங்களவை பாஜக தலைவருமான ஜேபி நட்டா குற்றம்சாட்டியுள்ளார்.
வக்ப் வாரிய சட்டத்திருத்த மசோதா நாட்டின் நலனுக்காக மட்டுமே கொண்டு வரப்படுகிறது. எந்த கட்சியின் நலனுக்காகவும் கொண்டு வரப்படவில்லை என்றும் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா ராஜ்யசபாவில் பேசியுள்ளார்.

வக்பு வாரிய மசோதா
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே லோக்சபாவில் நிறைவேறியது. இந்த மசோதா இன்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீதான விவாதத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினர்.
வக்ஃப் மசோதா மீதான விவாதத்தில் மத்திய அமைச்சர் ஜேபி நட்டா பேசுகையில், "நாட்டின் நலனுக்காகவே வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. 25 மாநில வக்ஃப் வாரியங்களுடன் கலந்து ஆலோசித்தோம். நாடாளுமன்றக் கூட்டுக்குழுவினர் நாட்டின் 25 முக்கிய நகரங்களுக்கு சென்று கருத்துகளைப் பெற்றனர்.
காங்கிரஸ் ஆட்சியில்
ஆனால், மசோதா மீதான விவாதத்தில் இருந்து திசைதிருப்ப எதிர்க்கட்சிகள் முயற்சி செய்கின்றன. அவர்களிடம் விவாதிப்பதற்கு என உண்மையான எந்த விஷயமும் இல்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் வக்ப் சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட போது அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவில் 13 பேர் மட்டுமே இருந்தனர். தற்போது 31 பேர் உள்ளனர்.
காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, 2013ல் கொண்டு வரப்பட்ட வக்ப் குறித்த மசோதா, 2014ல் உங்களை காப்பாற்றவில்லை. எதிர்க்கட்சிகள் இந்த மசோதா குறித்து பொய்த் தகவலை பரப்புகின்றன. இது நிராகரிக்கப்பட வேண்டும். இந்த மசோதா விவகாரத்தில் ஜனநாயக முறைகளை மோடி அரசு பின்பற்றுகிறது.
யாரை திருப்தி படுத்தவும் இல்லை
திட்டங்களை அமல்படுத்தும்போது, மக்களின் நலனுக்கு தான் பிரதமர் மோடி முன்னுரிமை அளித்து வருகிறார். தேசிய நீரோட்டத்தில் முஸ்லிம்களை சேர்க்காமல் 70 ஆண்டுகள் வைத்து இருந்தது யார்? முத்தலாக் முறையை நிறுத்த பிரதமர் மோடிக்காக முஸ்லிம் பெண்கள் காத்து இருந்தனர். இந்த முறையை பலநாடுகள் நிறுத்திவிட்டன. எந்த கட்சியின் நலனுக்காகவும், யாரை திருப்திப்படுத்தவும் இந்த மசோதா கொண்டு வரப்படவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தோனேசியா வக்ஃப் வாரியத்தை சீரமைத்து உள்ளது. சவுதி அரேபியா உள்ளிட்ட முஸ்லிம் நாடுகளும் வக்ஃப் வாரியத்தை சீரமைத்து உள்ளன. இந்தியாவும் ஏன் சீரமைக்கக்கூடாது? வக்ஃப் வாரியங்கள் முறையாக நிர்வகிக்கப்படக்கூடாதா?
முஸ்லீம் பெண்களை
எகிப்து, சூடான், வங்கதேசம் மற்றும் சிரியா போன்ற முஸ்லிம் நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பே முத்தலாக் தடை செய்யப்பட்டிருந்தாலும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு தசாப்த காலமாக ஆட்சியில் இருந்தபோது முஸ்லிம் பெண்களுக்கு எதுவும் செய்யவில்லை. காங்கிரஸ் கட்சி, முஸ்லீம் பெண்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தியது" எனப் பேசியுள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications