தமிழ்நாட்டிலும் தான் வினாத்தாள் கசிந்தது.. அப்போது ராகுல் ஏன் பேசவில்லை? டேட்டாவோடு வந்த ஜேபி நட்டா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ''காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களில் பல்வேறு தேர்வுகளுக்கான வினாத்தாள் கசிந்துள்ளது. தமிழ்நாட்டிலும் ஆசிரியர் நியமன நுழைவு தேர்வு வினாத்தாள் கசிவு நடந்தது. ராகுல் காந்தி ஏன் அதுபற்றி விவாதிக்கவில்லை. அவர் தற்போது மாணவர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் மூலம் அரசியல் ஆதாயம் தேட விரும்புகிறார்'' என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா விமர்சனம் செய்துள்ளார்.

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினர், மாணவர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

jp-nadda-asks-why-did-rahul-gandhi-so-selective-and-listed-paper-leak-matters-including-tamil-nadu

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என்று கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் கூறி வருகின்றனர். இது மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜேபி நட்டா பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்த பேட்டியின்போது ராகுல் காந்தி கூறிய குற்றச்சாட்டுக்கு ஜேபி நட்டா பதிலளித்து விமர்சனம் செய்தார். ராகுல் காந்தி இன்று காலையில் கடந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சியி்ல 150க்கும் அதிக முறை வினாத்தாள் கசிந்துள்ளதாக கூறியிருந்தார். இதுபற்றி ஜேபி நட்டா கூறுகையில்,'' ஜம்மு காஷ்மீரில் சர்வீஸ் செலக்‌ஷன் தேர்வு வாரியத்தின் வினாத்தாள் கசிந்தது. அப்போது காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சியின் ஆட்சி நடந்தது. அதேபோல் காங்கிரஸ் ஆட்சியில் இமாச்சல பிரேதசத்தில் பள்ளி தேர்வு வாரியத்தின் வினாத்தாள் கசிந்தது.

ஜார்கண்ட்டில் காங்கிரஸ் - ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் ஜேஏசிக்கான இந்தி மற்றும் அறிவியல் வினாத்தாள் கசிந்தது. தமிழ்நாடு, தெலங்கானா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்த மாநிலங்களிலும் வினாத்தாள் கசிந்தது. தமிழ்நாட்டில் ஆசிரியர் நியமன நுழைவுத்தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்தது.

இதனால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியிடம் நான் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். அவர் ஏன் தேர்வு செய்து செயல்படுகிறார்? ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றுமு் அந்த கூட்டணியின் ஆதரவு பெற்ற அரசுகள் குறித்து அவர் ஏன் விவாதிக்கவில்லை?. இதன்மூலம் அவரது நிலைப்பாடு தெளிவாக தெரிகிறது. மாணவர்களின் நலனை காக்க வேண்டியது அவரது நோக்கம் அல்ல. கல்வியை மேம்படுத்துவதோ, க்வியின் தரத்தை உயர்த்துவதோ அல்லது மாணவர்களுக்கு நீதி கிடைப்பதை உறுதி செய்வதா அவரது நோ்கம்அல்ல. மாணவர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகள் மூலம் அரசியல் ஆதாயம் தேட விரும்புகிறார். இது துரதிர்ஷ்டவசமானது'' என விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+