"விலங்கு".. சாரதாவின் மண்டை ஓட்டை காணோம்! ஸ்மார்ட் கேம் ஆடிய கொலைகார காதலன்! ஏன் முக்கியம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் காதலியை 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காதலன் அப்தாப் அமீன் திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.

டெல்லியில் சாரதா என்ற பெண்ணை அப்தாப் அமீன் என்ற இளைஞர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்த அப்தாப் அமீன் டேட்டிங் ஆப் வழியாக சாரதாவை பார்த்து இருக்கிறார். 35 பாகங்களாக சாரதா உடலை வெட்டி, பிரிட்ஜில் வைத்து 18 நாட்களாக உடல் பாகங்களை அவர் அப்புறப்படுத்தி உள்ளார். இதற்காக போலீசில் அப்தாப் அமீன் கொடுத்த வாக்குமூலம்தான் தற்போது டெல்லியை உலுக்கி உள்ளது..

 சாரதா உடல்

சாரதா உடல்

இந்த நிலையில்தான் வழக்கில் தற்போது புதிய திருப்பம் ஏற்பட்டு உள்ளது. நேற்று இதில் அப்தாப் கொடுத்த வாக்குமூலத்தில் நான்தான் சாரதாவை கொலை செய்தேன், மெஹ்ரவுளி காட்டில் அவரின் உடல் பாகங்கள் உள்ளன. அருகில் உள்ள ஏரியில் உடல் பாகங்கள் உள்ளன என்று கூறி உள்ளார். இதையடுத்து போலீசார் மோப்ப நாய்களுடன் அந்த காட்டிற்கு சென்றனர். அப்தாப்பை போலீசார் உடன் கூட்டி சென்றனர். அங்கு போலீஸ் கண்ட காட்சிதான் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 போலீசார்

போலீசார்

அந்த காட்டு பகுதிக்குள் போலீசார் கை துண்டுகளையும், உடல் எலும்புகளையும் கண்டுபிடித்து உள்ளனர். மோப்ப நாய்கள் சரியாக எலும்புகளை கண்டுபிடித்து கொடுத்துள்ளன. மற்ற உடல் பாகங்களை தேடும் பணி தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால் சாரதாவின் தலையை காணவில்லை. சாரதாவின் தலை எங்கே போனது என்று போலீசாருக்கு தெரியவில்லை. இங்குதான் வீசினேன் என்று அப்தாப்பும் வாக்குமூலத்தில் சொல்லி இருக்கிறார்.

தலை ஏன் முக்கியம்

தலை ஏன் முக்கியம்

ஆனால் அங்கே தலை இல்லை. சமீபத்தில் வெளியான விலங்கு என்ற தொடர் பெரிய அளவில் ஹிட் அடித்தது. நடிகர் களவாணி விமல் நடித்த அந்த தொடரிலும் கொலை காரன் தலையை ஒளித்து வைத்து இருப்பான். போலீசுடன் காட்டில் தேட சென்ற போது.. கொஞ்ச நேரம் தேடட்டும் சார் என்னை அடிச்சாங்களா என்று கூறுவான். அதேபோல்தான் நேற்றும் அப்தாப் தலை எங்கே இருக்கிறது என்று சொல்லாமல் போலீசாரை சுற்ற விட்டு உள்ளான்.

கொலை வழக்கு

கொலை வழக்கு

இது போன்ற கொலை வழக்குகளில் தலை மிக முக்கியம். அப்போதுதான் கொலை செய்யப்பட்ட பெண் சாரதா என்று உறுதி செய்யப்படும். மண்டை ஓட்டை வைத்து ஸ்கல் சூப்பர்இம்போசிஷன் முறையில் அந்த பெண்ணின் தோற்றத்தை உறுதி செய்து, கொலையானது சாரதா என்று உறுதி செய்வார்கள். ஆனால் இங்கே தலை இல்லை. தலை கிடைக்காத பட்சத்தில் கொலை குற்றத்தை நிரூபிப்பதே பெரிய சிக்கல் ஆகும்.

குற்றவாளி யார்?

குற்றவாளி யார்?

குற்றவாளியை போலீசார் அடித்து ஒப்புக்கொள்ள வைத்தனர் என்று கூட வாதம் வைக்க நேரிடும். மற்ற சாட்சியங்கள் பெரிதாக கோர்டில் நிற்காது. இது தெரிந்தோ தெரியாமலோ அப்தாப் மண்டை ஓட்டை மறைத்து வைத்து இருக்கிறான். அந்த அளவிற்கு இந்த கொலையில் அவர் ஸ்மார்ட்டாக செயல்பட்டு உள்ளான். மண்டை ஓடு கிடைத்து மரணத்தை உறுதி செய்ய வேண்டும். அதோடு அப்தாப்பை கைது செய்த பின் மருத்துவமனைக்கு செக்கப் செய்ய அழைத்து சென்றுள்ளனர்.

மருத்துவர் சோதனை

மருத்துவர் சோதனை

அவரை செக் அப் செய்த மருத்துவர் வடஇந்திய ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அப்தாப் ஏனோ நம்பிக்கையாக இருக்கிறார். அவர் நம்பிக்கையா பேசுகிறார். ஆங்கிலத்தில் பேசும் அவர், நிறைய சட்ட நுணுக்கங்களை தெரிந்து வைத்து இருக்கிறார். ஏற்கனவே பல கொலைகள் செய்தது போல கூலாக அவர் பேசி உள்ளார். அவரின் பேச்சுக்களுக்கு இடை இடையே கோபம் அடைந்தார், என்று தெரிவித்து உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+