ராமர் கோவில் திறப்பு விழா: பெங்களூர், கொல்கத்தா டூ அயோத்தி.. விமான சேவைகள் தொடங்கியாச்சு!
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து பெங்களூர் மற்றும் கொல்கத்தா செல்லும் விமான சேவைகளை மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரும் 22-ந் தேதி நடைபெற உள்ளது. அயோத்தியில் புதிய விமான நிலையம் அண்மையில் திறக்கப்பட்டது. நாட்டின் முக்கிய நகரங்கள் அயோத்தி விமான நிலையத்துடன் இணைக்கப்பட்டு வருகின்றன.

அயோத்தியை பெங்களூர் மற்றும் கொல்கத்தாவுடன் இணைக்கும் விமான சேவைகளைக் காணொலி காட்சி மூலம் இன்று மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ஜோதிராதித்யா எம் சிந்தியா, வடக்கில் டெல்லி, மேற்கில் அகமதாபாத் ஆகிய நகரங்களுடன் அயோத்தி ஏற்கனவே நேரடி விமானப் போக்குவரத்து சேவையில் இணைக்கப்பட்டதாகக் கூறினார். தற்போது கிழக்கில் கொல்கத்தா, தெற்கில் பெங்களூரூ ஆகிய நகரங்களுடனும் அயோத்தி இணைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தியில் மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையம் தொடங்கப்பட்ட 17 நாட்களுக்குள், அயோத்தி, நாட்டின் நான்கு முனைகளுடனும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான ராமர் கோயிலுக்குச் செல்ல நாடு முழுவதிலும் உள்ள பக்தர்களுக்கு இந்த விமான இணைப்புகள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசத்தில் இந்த ஆண்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை 16 ஆக அதிகரிக்கும் என்றும், 2025-ம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கை 19 ஆக உயரும் என்றும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் இந்த விமான சேவைகளைத் தொடங்கியதற்காக ஏர் இந்தியா எக்ஸ்பிரசுக்கு நன்றி தெரிவித்தார். உத்தரப்பிரதேச அரசின் தொடர்ச்சியான ஆதரவுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். இந்த முன்முயற்சி சுற்றுலாவை மேம்படுத்துவது மட்டுமல்லாமல் இந்த நகரங்களின் பொருளாதார வளர்ச்சிக்கும் பங்களிக்கும் என்று அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சிவில் விமானப் போக்குவரத்து துறை செயலாளர் வும்லுன்மங் வுல்னம் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications