கல்பனா சாவ்லா 2003ல் விண்வெளியில் இருந்து திரும்பியபோது நடந்த 'அந்த' பயங்கரம்!
டெல்லி: விண்வெளிப் பயணங்கள் பற்றிய விவாதங்கள், எதிர்பார்ப்புகள், ஆய்வுகள் என சிலாகிதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.. இந்த தருணங்களில் எல்லாம் விண்வெளிப் பயணத்தில் காலடி வைத்த முதல் இந்திய வம்சாவளிப் பெண்ணான கல்பனா சாவ்லா நமது நினைவுகளுக்கு வராமல் போவது இல்லை.. தமிழ்நாடு அரசு கூட கல்பனா சாவ்லா விருது வழங்குகிறது அல்லவா.. யார் இந்த கல்பனா சாவ்லா? விண்வெளி பயணத்தில் என்ன சாதனை நிகழ்த்தினார்?
கல்பனா சாவ்லாதான், விண்வெளிக்கு பயணித்த முதல் இந்திய வம்சாவளி பெண். இந்தியாவின் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த பஞ்சாபி குடும்பத்தில் பிறந்தவர் கல்பனா சாவ்லா. சண்டிகர் பஞ்சாப் பொறியியல் கல்லூரியில்தான் வான்வெளிப் பொறியியல் கல்வியை கற்றார் கல்பனா சாவ்லா. பின்னர் அமெரிக்காவின் டெக்சாஸில் மேற்படிப்பை நிறைவு செய்து 1980களின் இறுதியில் நாசா- அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையத்தில் காலடி வைத்தார் கல்பனா சாவ்லா.

1990களின் நடுப்பகுதியில் இருந்து விண்வெளிப் பயணத்துக்கு தயாரானார் கல்பனா சாவ்லா. 1997-ம் ஆண்டு முதன் முதலாக விண்வெளிக்கு சென்று திரும்பினார் கல்பனா சாவ்லா. விண்வெளிக்கு சென்ற 2-வது இந்தியர் என்ற பெருமையைப் படைத்தார்; விண்வெளிக்கு சென்ற முதல் இந்திய பெண் என்ற சரித்திரத்தையும் எழுதினார் கல்பனா சாவ்லா எனும் தீரமங்கை.
2003-ம் ஆண்டும் இதேபோல கல்பனா சாவ்லா விண்வெளிக்குப் பயணப்பட்டார். ஆனால் கல்பனா சாவ்லாவின் இறுதிப் பயணம் அதுவாகவே இருக்கும் என யாரும் நினைக்கவும் இல்லை.. விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பிக் கொண்டிருந்தது கல்பனாவின் விண்கலம்.. பூமியை தொட்டுவிடும் தொலைவில் வந்த நிலையில் திடீரென அந்த விண்கலம் வெடித்துச் சிதறியது.. ஒட்டுமொத்த உலகமே அப்படியே மூச்சடைத்து போன தருணம் அது.. விண்கலத்தில் இருந்த 7 விண்வெளி வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். உலகமே மிகப் பெரும் அதிர்வுக்குள்ளானது; ஒட்டுமொத்த இந்திய தேசமும் பெருந்துயரில் கண்ணீரில் மூழ்கியது.
அமெரிக்கா முதல் தென்கோடி இந்தியாவின் குமரி முனை வரை ஏதோ ஒரு நாட்டில் ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒன்றின் பெயரில்,. அதாவது தெருக்களின் பெயரில், உதவித் தொகைகளின் பெயரில், விருதுகளின் பெயரில்.. இன்னமும் அதி உச்சமாக விண்வெளியில் சிறுகோள் ஒன்றின் பெயரை தாங்கியவராக நம் கல்பனா சாவ்லா நம்மில் இன்னமும் வாழ்கிறார்! அதனால்தான் விண்ணில் இருந்து இறங்கிய இந்திய தாரகை கல்பனா சாவ்லா விண்வெளியில் கரையவில்லை.. இதயங்களில் கரைந்து நிற்கிறார் என்கின்றன வரலாற்றின் பக்கங்கள்!
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications