Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சஞ்செய் காந்தியின் பள்ளி கால நண்பர்.. மத்திய பிரதேச காங்கிரசின் முகம்.. யார் இந்த கமல்நாத்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்படும் கமல்நாத், அவரது மகன் நகுல் நாத் பாஜகவில் இணைய போவதாக தகவல் வெளியாகி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கி வரும் கமல்நாத்திற்கும் காங்கிரஸ் கட்சிக்கும் உள்ள தொடர்பு குறித்து இங்கு பார்க்கலாம்.

மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முகமாக அறியப்படுபவர் கமல்நாத். அம்மாநில முதல்வராகவும் கமல்நாத் பதவி வகித்துள்ளார். கட்சியின் சீனியர் தலைவராக அறியப்படும் கமல்நாத்திற்கு அம்மாநில காங்கிரஸில் கடும் எதிர்ப்புகளும் இல்லாமல் இல்லை. குறிப்பாக அண்மையில் முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு அவருக்கு எதிராக கட்சிகள் கலக்குரல்களும் அதிகரித்தன. மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் பெரும் தோல்வி அடைய காரணமே பாஜகவின் பி டீம் ஆக கமல்நாத் செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் கமல்நாத் மீது வைக்கப்பட்டது.

 Kamal Nath who starts his political career with the Nehru - Gandhi family Full details about him

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வெறும் 66 இடங்களில்தான் வென்றது. தேர்தல் தோல்வி தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அலோக் சர்மா, கமல்நாத் மட்டுமே அத்தனை காங்கிரஸ் வேட்பாளர்களின் தோல்விக்கு காரணம் என நேரடியாக விமர்சித்தார். இந்த சலசலப்புகளால் மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருந்தது.

கமல்நாத் அப்செட்: இதற்கு மத்தியில் மத்திய பிரதேசத்தில் ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தனக்கு சீட் வேண்டும் என்று கமல்நாத் விரும்பினார். அதேபோல தனது மகன் சிந்த்வாரவை லோக்சபா தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்பது அவரது திட்டமாக உள்ளது. ஆனால், ராஜ்யசபா தேர்தலில் கமல்நாத்திற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அப்செட்டில் கமல்நாத் இருப்பதாக சொல்லப்படுகிறது.

பாஜகவில் இணைய உள்ளதாக: இதன் காரணமாக கமல்நாத் பாஜகவில் இணைய உள்ளதாக யூகங்கள் கொடிகட்டி பறக்க ஆரம்பித்தன. இதற்கு வலு சேர்க்கும் விதமாக கமல்நாத்தின் மகன் நகுல் நாத், தனது சமூக வலைத்தள பக்கத்தின் பயோவில் காங்கிரஸ் கட்சியின் பெயரை நீக்கினார். ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை சில தினங்களில் மத்திய பிரதேசத்திற்கு வருகிறது. அதற்கு முன்பாக கமல்நாத் மற்றும் அவரது மகன் நகுல் நாத் பாஜகவில் இணைய உள்ளதாக ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான், மகராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் பாஜகவில் இணைந்து காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி கொடுத்தார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன் காங்கிரஸ் கட்சிக்கு இடி போல இந்த தகவல் வெளியாகியுள்ளது.

யார் இந்த கமல்நாத்?: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கமல்நாத். 78 வயதான கமல்நாத், சிந்த்வாரா லோக்சபா தொகுதியில் 9 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1980-ம் ஆண்டு முதல் தீவிர அரசியல் களத்தில் உள்ள கமல்நாத், மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியின் முகமாகவும் உள்ளார். மத்திய அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் சார்பில் 9 முறை எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சஞ்செய் காந்தியின் பள்ளி நண்பர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளராகவும் கமல்நாத் பதவி வகித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையிலான மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் மத்திய இணை அமைச்சராக பதவி வகித்தார். அதன்பிறகு மாநில அரசியல் பக்கம் தனது கவனத்தை திருப்பிய கமல்நாத், 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேச முதல்வரகாவும் பொறுப்பேற்றார். 2018 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 தொகுதிகள் வென்று தனிப்பெரும் கட்சியாக வென்றது.

கூட்டணி ஆட்சி நடத்தி வந்த நிலையில், பாஜக நடத்திய ஆபரேஷன் தாமரையில் ஆட்சியை பறிகொடுத்தார் கமல்நாத். கமல்நாத்தை பொறுத்தவரை நேரு - காந்தி குடும்பத்தினருடன் நெருக்கமான உறவை கொண்டு இருந்தார். காங்கிரஸ் தலைமையின் நம்பிக்கைக்குரிய தலைவராக இந்திரா காந்தி காலத்திலும் இருந்தார். இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், சஞ்செய் காந்தியும் கமல்நாத்தும் பள்ளி காலத்தில் ஒன்றாக படித்தவர்கள்.

காங்கிரசில் இருந்து போக மாட்டார்: சஞ்செய் காந்தியுடனான நட்பு, கமல்நாத்திற்கு கட்சியில் வேகமாக முன்னேற பெரும் உதவியாக இருந்தது. காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க தலைவராக இருந்த கமல்நாத்திற்கு சமீப காலமாக கட்சி மேலிடத்துடன் அவ்வளவாக நல்லுறவு இல்லை. குறிப்பாக மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு ராகுல் காந்தி, கமல்நாத் இடையே பேச்சுவார்த்தையே இல்லாமல் போனது.

ராஜ்யசாபா சீட்டும் கிடைக்காமல் போன அதிருப்தியில் இருப்பதால் தற்போது அவர் பாஜகவில் தனது மகனும் சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இந்திரா காந்தி காலத்தில் இருந்தே காந்தி குடும்பத்திற்கு நெருக்கமானவராக இருக்கும் கமல்நாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து செல்ல மாட்டார் என்று மத்திய பிரதேச மாநிலத்தின் மற்றொரு மூத்ததலைவரான திக் விஜய்ச் சிங் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+