எனது மருமகள் கமலா ஹாரிஸ் சுறுசுறுப்பான துணை அதிபராக திகழ்வார்... தாய்மாமன் கோபாலன் நம்பிக்கை..!
டெல்லி: அமெரிக்க துணை அதிபராக வெற்றிபெற்றுள்ள கமலா ஹாரிஸ் மிகவும் சுறுசுறுப்பான துணை அதிபராக செயலாற்றுவார் என அவரது தாய்மாமா கோபாலன் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும், கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக டெல்லியில் இருந்து வாஷிங்டன் செல்லவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தாய்மாமா
''அமெரிக்க துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் குறித்து அவரது சொந்த தாய்மாமாவான கோபாலன் பாலகிருஷ்ணன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார். டெல்லியில் வசித்து வரும் இவர் தனது சகோதரி மகள் வெற்றி குறித்து கூறியிருப்பதாவது; ''அமெரிக்க துணை அதிபர் தேர்வில் கமலா ஹாரிஸ் வெற்றிபெறுவார் என நான் எதிர்பார்த்தேன். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட கமலா ஹாரிஸிடம் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தொலைபேசியில் உரையாடினேன். அப்போது கூட நீ தான் வெற்றிபெறுவாய் என அவரிடம் கூறியிருந்தேன்''.

சுமைகளில் பாதி
''அமெரிக்க வரலாற்றில் கமலா ஒரு அற்புதமான துணை அதிபராக செயலாற்றுவார். கருப்பின விவகாரம், பொருளாதாரம், கொரோனா வைரஸ், குடியேற்ற கொள்கைகள், என இப்படி பல பிரச்சனைகள் அமெரிக்காவில் உள்ளன. ஜோ பிடன் ஒரு பொறுப்பான மனிதர். அவர் நிச்சயம் கமலா ஹாரிஸ் தோள்களில் தனது சுமைகளில் பாதியை ஏற்றுவார். அதனை கமலா மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்டு செயலாற்றுவார். வரு மாதங்களில் கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் மிகவும் பரபரப்பாக இருப்பார் என நினைக்கிறேன்''.

ஜோ பிடனை சந்திப்பேன்
''கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபராக பதவியேற்கும் நிகழ்வில் நிச்சயம் நான் கலந்துகொள்வேன். இதற்காக டெல்லியில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லவிருக்கிறேன். கமலா செனட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோதே நான் அவரது பதவியேற்பு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தேன். அப்போது துணை அதிபராக இருந்த ஜோ பிடனை எனக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த முறை அதிபராகியுள்ள ஜோ பிடனை சந்திப்பேன் என நான் நாம்புகிறேன்.''

கமலா தாய்
''கமலாவும் அவரது சகோதரியான மாயாவும் அவர்களது தாய், அதாவது என்னோட சகோதரி ஷியாமளாவை போன்றவர்கள். இதில் மாயாவை காட்டிலும் கமலா வாழ்க்கையில் ஷியாமளா இரண்டறக் கலந்தவர் என்றுக் கூட சொல்லலாம். இதில் சந்தேகத்திற்கே இடமில்லை. '' என்று கமலா ஹாரிஸ் தாய்மாமா கோபாலன் பாலாகிருஷ்ணன் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications