"ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே பொதுமக்களை சந்திப்பேன்!" கங்கனா ரனாவத் போட்ட புது கண்டிஷன்
டெல்லி: சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், தனது மக்களவைத் தொகுதியான ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதி மக்கள், தன்னைச் சந்திக்க விரும்பினால், ஆதார் அட்டையைக் கொண்டு வர வேண்டும் எனச் சொல்லியுள்ளார். இதைக் காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் பல்வேறு நட்சத்திரங்கள் களமிறங்கினர். அதன்படி இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் களமிறங்கினார்.

இந்தத் தேர்தலில் அவர் காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார். எம்பியாக பதவியேற்றுள்ள அவர், ஒரு பக்கம் தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.
கங்கனா ரனாவத்: இதற்கிடையே செய்தியாளர்களிடம் பேசிய நடிகை கங்கனா ரனாவத், "இமாச்சல பிரதேசம் நாடு முழுக்க இருந்த அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.. எனவே மண்டி பகுதியில் இருந்து வருவோர் என்னைச் சந்திக்க ஆதார் அட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும். மேலும், மக்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருப்பதை உறுதி செய்ய.. நீங்கள் எதற்காக வருகிறீர்களோ அதைக் கடிதமாகவும் எழுதி எடுத்து வாருங்கள்.
ஆதார் வேண்டும்: சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருவதால், சாமானியர்கள் நிறையச் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.. ஹிமாச்சலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்னைச் சந்திக்க விரும்பினால், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு நேரடியாக வரலாம்.. மண்டியில் உள்ளவர்கள் அங்குள்ள எனது எம்பி அலுவலகத்திற்கு வரலாம்.. இமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகிறார்கள். இதனால் அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்கூடாது என்பதற்காகவே ஆதார் எடுத்து வர சொல்கிறேன். மேலும், உங்கள் கோரிக்கை குறித்துத் தனிப்பட்ட முறையில் என்னைச் சந்திப்பது நல்லதுதான்" என்று கூறினார்.
அதிரடியாக பேசிய ராகுல் காந்தி.. மனநல ஆலோசனை பெற வேண்டும் என பாஜக எம்பி கங்கனா ரணாவத் விமர்சனம்
காங்கிரஸ் சாடல்: கங்கனா ரனாவத்தின் இந்தக் கருத்தைக் காங்கிரஸ் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் இதுபோல செய்வது சரியானது இல்லை என்று சாடியுள்ளனர். மண்டி மக்களவைத் தொகுதியில் கங்கனா ரனாவத்திடம் தோல்வியடைந்த காங்கிரஸ் தலைவர் விக்ரமாதித்ய சிங், தன்னை சந்திக்க விரும்புவோர் ஆதார் அட்டையை எல்லாம் எடுத்து வரத் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் மக்கள் பிரதிநிதிகள். எனவே, மாநிலத்தின் ஒவ்வொரு பகுதி மக்களையும் சந்திப்பது தான் எங்கள் பொறுப்பு.. அது ஒரு சிறிய பணியாக இருந்தாலும், பெரிய பணியாக இருந்தாலும், கொள்கை விஷயமாக இருந்தாலும், தனிப்பட்ட வேலையாக இருந்தாலும் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்.. இதற்காகத் தனியாக ஆதார் கார்டு எல்லாம் தேவையில்லை. ஒருவர் மக்கள் பிரதிநிதியிடம் வருகிறார் என்றால் அவர்கள் ஏதோ வேலைக்காகவே வருகிறார்கள். அவர்களிடம் சென்று இதை எடுத்து வா அதை எடுத்து வா எனச் சொல்வது சரியானது இல்லை" என்று சாடினார்.
லோக்சபா தேர்தல்: நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மாண்டி தொகுதியில் பாஜக சார்பில் கங்கனா ரனாவத் போட்டியிட்டார். காங்கிரஸ் சார்பில் இமாசல பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனும் தற்போதைய இமாச்சல பிரதேச அரசின் அமைச்சருமான விக்ரமாதித்ய சிங் களமிறங்கினார். இந்தத் தேர்தலில் கங்கனா ரனாவத் 5.37 லட்சம் வாக்குகளைப் பெற்று சுமார் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications