அதிரடியாக பேசிய ராகுல் காந்தி.. மனநல ஆலோசனை பெற வேண்டும் என பாஜக எம்பி கங்கனா ரணாவத் விமர்சனம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று ராகுல் காந்தி ஆற்றிய உரை, மத்தி்ய அரசு மீதான துல்லிய தாக்குதல் என்று எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்நிலையில், ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டிய நிலைமையில் இருக்கிறார் என்று பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் கூறியுள்ளார்.
லோக்சபா தேர்தல் முடிந்த நிலையில் கடந்த 27ம் தேதி 18வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. எம்பிக்கள் பதவியேற்றதை தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றியிருந்தார். குடியரசுத் தலைவரின் உரையின்போது மணிப்பூர், நீட், அக்னிபாத் என எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பியிருந்தனர்.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதங்கள் தொடங்கின. நேற்று இந்த விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பல்வேறு விவகாரங்களில் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். எதிர்க்கட்சி தலைவராக ராகுல் உரையாற்றுவது இதுவே முதல் முறை என்பதால் அவர் பேசிய விஷயங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
குறிப்பாக, கடவுள் சிவன் படத்தை காட்டி, "எனது இன்றைய உரையை சிவன் படத்தை காண்பிப்பதில் இருந்து தொடங்குகிறேன். இந்தப் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்துள்ளோம்.
முதல் யோசனை, ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணமும் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது. சிவன் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அதில் இருந்து பின்வாங்க கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது. அந்த உணர்வோடு தான் நாங்கள் போராடி வருகிறோம். இந்த யோசனை எங்களை எதிர்க்கட்சியாக மட்டுப்படுத்தியுள்ளது. எனக்கு இது தெரியும். நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்.
எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் உண்மை.
சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பது வன்முறையின் அடையாளம் அல்ல. மாறாக, அகிம்சையின் சின்னம். அதனால்தான் இடதுபக்கம் வைக்கப்பட்டுள்ளது. வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுகை பக்கம் திரிசூலம் இருந்திருக்கும். நாங்கள் பாஜகவை எதிர்த்து போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை. நாங்கள் உண்மையை பாதுகாக்க துணிந்தபோதும் வன்முறை வெளிப்படவில்லை.
அடுத்து மூன்றாவது யோசனை. மூன்றாவது யோசனை உண்மை, தைரியம் மற்றும் அகிம்சையில் இருந்து வெளிப்படுகிறது. இந்த யோசனை நீங்கள் வெறுக்கும் ஒரு சின்னமாக இருக்கலாம். அதுதான் காங்கிரஸ் கட்சியின் சின்னமான அபய் முத்ரா. பயமின்மையையும், சத்தியத்தையும், அகிம்சையையும் இந்த முத்திரை வலியுறுத்துகிறது. சத்தியமும், அகிம்சையும் மகாத்மா காந்தியின் போதனைகள்.
கடவுளுடன் நேரடி தொடர்பும், கடவுளிடம் நேரடியாக பேசும் பிரதமர் மோடி, காந்தி இறந்துவிட்டதாகவும், ஆவணப் படம் மூலமே காந்தியை உலகம் அறிந்ததாகவும் கூறுகிறார். அறியாமையை உங்களால் புரிந்து கொள்ள முடிகிறதா? காந்தி இறக்கவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார்.
நான் கவனித்த இன்னொரு விஷயம், ஒரு மதம் மட்டுமே தைரியத்தை கூறவில்லை. அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன. இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. உண்மையான இந்து தர்மத்தை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜகவினர் சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள். பிரதமர் மோடியும், பாஜகவும் மட்டுமே ஒட்டுமொத்த இந்துக்கள் கிடையாது. அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர்.
அக்னிவீரர் திட்டம் ராணுவத்துக்கான திட்டமல்ல, மோடிக்கான திட்டம். இத்திட்டத்தை உருவாக்கியது ராணுவம் அல்ல. பிரதமர் மோடிதான். அக்னிவீரர் திட்ட வீரர்களின் உயிரிழப்பை வீர மரணங்களாக பாஜக அரசு ஏற்குமா? 'USE AND THROW' முறையில் ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் முறைதான் அக்னிபாத் திட்டம்.
மணிப்பூர் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா? அங்கு ஏன் பிரதமர் மோடி செல்லவில்லை. பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் பொறுத்தவரை மணிப்பூர் ஒரு மாநிலமே இல்லை. ராமர் கோயில் திறப்பு விழாவிற்கு அயோத்தி மக்களுக்கு அழைப்பு இல்லை. அம்பானி மற்றும் அதானிக்கே அழைப்பு விடுக்கப்பட்டது. அயோத்தி மேம்பாட்டு திட்டத்துக்காக அங்குள்ள ஏராளமான மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டது. ஆனால் அதற்கான இழப்பீடு வழங்கப்படவில்லை.
நீட் தேர்வு வியாபார ரீதியாக நடத்தப்படுகிறது. பணக்காரர்களின் குழந்தைகளுக்காகவே நீட் தேர்வு நடத்தப்படுகிறது. கடந்த 7 ஆண்டுகளில் 70 முறை வினாத்தாள் கசிவு நிகழ்வுகள் நடந்துள்ளன. பணம் இருந்தால் தான் மருத்துவம் படிக்க முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது" என்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
இவரது பேச்சுக்கு பாஜக எம்பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உத்தரப் பிரதேசத்தில் ராகுல் காந்தியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் ராகுல் காந்தி மனநல ஆலோசனை பெற வேண்டும் என்று பாலிவுட் நடிகையும், பாஜக எம்பியுமான கங்கனா ரணாவத் தெரிவித்திருக்கிறார். இது குறித்த தனது x தளத்தில், "
"எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில் ராகுல் காந்தி ஜி தெரிவித்துள்ள அனைத்து பொறுப்பற்ற கருத்துகளுக்கு மத்தியில், அவர் குறிப்பிட்டுள்ளதாவது, நான் ஒரு ராகுல் அல்ல, இருவராக உள்ளேன். அதில் ஒருவர் அரசமைப்புக்காக வாழ்ந்து வருவதாகவும், மற்றொரு ராகுல் மடிந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது வேடிக்கையான விஷயமல்ல. ராகுல் ஜி உடனடியாக மருத்துவ ஆலோசனை எடுத்துக்கொள்ள வேண்டும். குடும்பத்திலிருந்தும், தாயாரிடமிருந்தும் வரும் அழுத்தங்களால், நீங்கள் யாராக இருக்க வேண்டுமென விரும்புகிறீர்களோ அதைவிடுத்து வேறொருவராக இருக்க நேரிடுவதால் இதுபோன்ற அடையாளச் சிக்கல்கள் ஒருவருக்கு உண்டாகும். இதனை பெரும்பாலான மனநல ஆலோசகர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ராகுல் ஜியின் பேச்சில் ஏராளமான சிக்கல்களும் வலிகளும் உள்ளன.
பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் ராகுல் பேசும்போதும், தன்னால் இருவேறு நபர்களைக் காண முடிவதாகத் தெரிவித்துள்ளார். இது போன்ற கருத்துகள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன. நாடாளுமன்றத்தில் இதுபோன்ற நடத்தைகள் குறித்த மனநலனைப் பற்றி நினைத்துப் பார்க்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக!












Click it and Unblock the Notifications