"தமிழ்நாட்டை பாருங்க.. உதயநிதி பேச்சை கேளுங்க.." பாஜக எம்பி கங்கனா ரனாவத் அடுத்து சொன்ன வார்த்தை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பெண்களை இழிவுபடுத்துவதற்காக அவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவது என்பது நீண்ட காலமாக பின்பற்றப்படும் நடைமுறை என்றும், இது இந்தியாவுக்கு மட்டும் உரித்தானது அல்ல என்றும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார். பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து சமூகமாக நாம் சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் பாஜகவிலும் இருக்கிறார். கடந்த 2024 லோக்சபா தேர்தலில் அவர் பாஜக சார்பில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் போட்டியிட்டு எம்பியாக தேர்வானார். தொடர்ந்து பல்வேறு விஷயங்களிலும் கருத்து கூறுவதை கங்கனா வாடிக்கையாக வைத்திருக்கும் நிலையில், இப்போது தமிழ்நாடு அரசியல் குறித்து பேசியிருக்கிறார்.

Kangana Ranaut attacks Udhayanidhi Kangana Ranaut Udhayanidhi BJP

கங்கனா ரனாவத்

தனது தொகுதியில் உள்ள குல்லுவில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு கூட்டத்துக்கு தலைமை தாங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா ரனாவத், தமிழக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் குறித்தும் நடிகை திரிஷா குறித்து இரட்டை அர்த்தத்தில் உதயநிதி பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையையும் குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் கூறுகையில், "தமிழ்நாட்டில் நடந்ததை நாம் பார்த்தோம். எந்தவொரு உறவாக இருந்தாலும் பெண்களை மட்டுமே குறிவைத்து தாக்கும் சம்பவங்கள் தொடர்கிறது. இப்போதும் கூட அதுவே நடந்துள்ளது. அவதூறு பரப்பப்படும் எப்போதும் பெண்ணே குறிவைக்கப்படுகிறார்" என்றார்.

சமூகமாக நாம் மாற வேண்டும்

இந்த விவகாரம் குறித்து மேலும் பேசிய கங்கனா ரனாவத், "இது ஏதோ இந்தியாவில் மட்டும் நடக்கும் பிரச்சினை இல்லை.. உலகம் முழுவதும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஒரு பெண் வேலை செய்பவராக இருந்தாலும், வெற்றி பெற்றவராக இருந்தாலும், தலைவராக இருந்தாலும், அதிகாரம் இருந்தாலும் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், அவரை தனிப்பட்ட முறையில் அவமதித்து அவரை அவமானப்படுத்தவே முயல்கிறார்கள்.

பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கீழ்த்தரமான பேச்சுகள் எப்போது நிற்கும்? ஒரு சமூகமாக நம்மை நாமே பார்த்து கொள்ள வேண்டும். பெண்களை எப்படி பார்க்கிறோம், உண்மையில் அவர்களை மதிக்கிறோமா என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டிய நேரம் இது" என்றும் கங்கனா ரனாவத் தெரிவித்தார்.

முதல்வர் விஜய்

சமீபத்தில் சட்டசபையில் முதல்வர் விஜய்யும் கூட இது தொடர்பாக பேசியிருந்தார். தமிழக சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் விஜய், "அரசியல் விமர்சனங்களை கடுமையாக வைக்கலாம் தவறில்லை.. ஆனால், பெண்களுக்கு எதிராக அவதூறான கருத்துகள் இருக்கக்கூடாது" என்பது போல பேசியிருந்தார். தனிப்பட்ட தாக்குதல்கள், இரட்டை அர்த்த பேச்சுகள் அல்லது பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளைப் பயன்படுத்தினால் உடனடியாகவும் சமரசமின்றியும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் விஜய் கூறியிருந்தார்.

என்ன நடந்தது

காவிரி போராட்ட கூட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் உதயநிதி ஸ்டாலின் இரட்டை அர்த்தத்தில் ஒரு கருத்தை தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது. உதயநிதி பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் ஒருவர் நடிகையில் பெயரை குறிப்பிட்டார். அப்போது உதயநிதி சொன்ன ஒரு கருத்து சர்ச்சையாக வெடித்தது. அவர் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக விமர்சனங்கள் எழுந்தன. இருப்பினும், அதை திட்டவட்டமாக மறுத்த உதயநிதி, தான் காவிரி விவகாரம் குறித்தே பேசியதாகவும் நடிகையின் பெயரை தான் குறிப்பிடவே இல்லை என்றும் கூறியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+