Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிரம்பை விமர்சித்த பதிவை நீக்க சொல்லி உத்தரவிட்ட பாஜக தலைவர் நட்டா.. கங்கனா ரனாவத் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி மையங்களை அமைக்க கூடாது என்று டிரம்ப் கூறியிருந்தார். இதனை விமர்சித்து பாஜக எம்பியும், பாலிவுட் நடிகையுமான கங்கனா ரனாவத் பதிவிட்டிருந்த நிலையில், இந்த பதிவை பாஜக தலைவர் நட்டா உத்தரவின் பேரில் டெலிட் செய்துள்ளதாக ரனாவத் கூறியுள்ளார்.

டிரம்புக்கு எதிராக பாஜக தலைவர்கள் யாரும் பேசக்கூடாது என்று கட்சி தலைமை உத்தரவிட்டிருப்பதாகவும், எனவேதான் ரனாவத்தின் போஸ்ட் டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. இப்படியா டிரம்புக்கு பயப்படுவீர்கள் என்று சோஷியல் மீடியாவில் விமர்சனங்கள் வெடித்து கிளம்பியுள்ளன.

Kangana Ranaut Donald Trump Apple

முன்னதாக தனது இன்ஸ்டாகிரமில், "அவர் அமெரிக்க ஜனாதிபதி. ஆனால், உலகின் மிகவும் விரும்பப்படும் தலைவர் இந்தியப் பிரதமர். இது டிரம்புக்கு இரண்டாவது பதவிக்காலம். இந்தியப் பிரதமருக்கு மூன்றாவது பதவிக்காலம். சந்தேகத்திற்கு இடமின்றி டிரம்ப் ஆல்பா ஆண். நமது பிரதமர் ஆல்பா ஆணுக்கெல்லாம் தலைவர். இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இது தனிப்பட்ட ரீதியிலான பொறாமையா அல்லது அரசாங்க ரீதியான பாதுகாப்பின்மையா?" என்று பதிவிட்டிருந்தார்.

ஆனால் கொஞ்ச நேரத்திலேயே இந்த பதிவு டெலிட் செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு x பதிவில் பதிலளித்துள்ள ரனாவத், "ட்ரம்ப், ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக்கிடம் இந்தியாவில் தயாரிப்பு மையங்களை அமைக்க வேண்டாம் என கூறினார். பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா எனது பதிவை டெலிட் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு இணங்க, பதிவை டெலிட் செய்கிறேன்.

Kangana Ranaut Donald Trump Apple

அது எனது தனிப்பட்ட கருத்து என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். நட்டாவின் உத்தரவுக்கிணங்க, நான் உடனடியாக அந்த பதிவை இன்ஸ்டாகிராமிலிருந்தும் அழித்துவிட்டேன். இதற்காக மன்னிப்பு கோருகிறேன். நன்றி" என்று பதிவிட்டிருக்கிறார். இந்த விவகாரம் சோஷியல் மீடியாவில் விவாதமாக வெடித்து கிளம்பியிருக்கிறது. டிரம்புக்கு எதிராக யாரும் பேசக்கூடாது என்று பாஜக உத்தரவிட்டிருக்கிறது என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

இந்த விவகாரத்திற்கு பின்கதை இருக்கிறது. அமெரிக்க வரி காரணமாக, ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் இந்தியாவில் உற்பத்தி மையங்களை கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சிகளை கைவிட வேண்டும் என்று டிரம்ப் வலியுறுத்தியிருந்தார். தோஹாவில் நடந்த வர்த்தக நிகழ்ச்சியில் டிம் குக்-ஐ குறிப்பிட்டு பேசிய அவர்,

"நீங்க இதுக்கு முன்னாடி சீனாவுல தொழில் மையங்களை அமைத்தீர்கள். நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் இப்போது இந்தியாவில் உற்பத்தி மையங்களை அமைப்பதாக கேள்விப்பட்டோம். அப்படி செய்ய வேண்டாம். உலக அளவில் அதிக வரிகளை விதிப்பதில் இந்தியா முதன்மையாக இருக்கிறது. எனவே அங்கெல்லாம் உங்களால் கல்லா கட்ட முடியாது. எனவே அவங்க கதையை அவங்களே பார்த்துக்கொள்ளட்டும். நீங்க அமெரிக்காவை முன்னேத்துற வழியை பாருங்க" என்று பேசியிருந்தார்.

இதற்காகத்தான் கங்கனா கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். அவர் பதிவிட்ட கொஞ்ச நேரத்திலிலேயே அந்த பதிவு டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+