பாஜக களமிறக்கப்போகும் கங்கணா அஸ்திரம்.. கலகலக்கப்போகும் லோக்சபா தேர்தல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட உள்ளார் என அவரது தந்தை அமர்தீப் ரனாவத் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் நடித்த ‛தேஜஸ்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது. இந்திய விமானப்படை விமானியான தேஜஸ் கில்லை அடிப்படையாக வைத்து உருவான இந்த படத்தில் கங்கனா ரானவாத் விமானியாக நடித்து இருந்தார்.

Kangana Ranaut will contest parliament election 2024 on BJP ticket? says her father Amardeep

அதேபோல் ‛எமர்ஜென்சி' என பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தில் நடிகை கங்கனா ரனாவத் முன்னாள் பிரதமர் இந்தியா காந்தியாக நடித்துள்ளார். இந்த படம் டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது தள்ளிப்போய் உள்ளது. இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளது.

அநேகமாக நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு இந்த திரைப்படம் வெளியாகலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் தற்போது பாஜக தலைவர்களுடன் நெருக்கம் காட்டி வருகிறார். அதோடு பாஜக தலைவர்கள் சொல்லும் கருத்துகளை வெளிப்படையாக ஆதரித்து வருகிறார். இதனால் கங்கனா ரனாவத் விரைவில் பாஜகவில் இணையலாம் என சொல்லப்படுகிறது.

அதோடு வரும் நாடாளுமன்ற தேர்தலில் கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்புள்ளது என்ற தகவல்கள் தொடர்ந்து பரவி வருகிறது. இதுபற்றி கங்கனா ரனாவத் இன்னும் வெளிப்படையாக எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழலில் தான் கங்கனா ரனாவத்தின் தந்தை அமர்தீப் ரனாவத் பரபரப்பான தகவலை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக கங்கனா ரனாவத்தின் தந்தை அமர்தீப் ரனாவத் அளித்த பேட்டியில், ‛‛கங்கனா ரனாவத் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் பாஜக சார்பில் மட்டுமே களமிறங்குவார். மேலும் எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பதை கட்சி தான் முடிவு செய்யும்'' என தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் கங்கனா ரனாவத் சினிமாவில் நடிகையாக இருந்து அரசியலில் நுழைவது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக நடிகை கங்கனா ரனாவத் கிருஷ்ணரின் புகழ்பெற்ற துவாரகா கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவரிடம், ‛‛2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவீர்களா?''என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் ‛‛கிருஷ்ணர் ஆசீர்வதித்தால் நான் போட்டியிடுவேன்'' என தெரிவித்து இருந்தார். தற்போது அவரது தந்தை கங்கனா ரனாவத் பாஜக சார்பில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+