களமிறங்கிய கனிமொழி.. கரப்பான்பூச்சி கட்சியின் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு.. மத்திய அரசு மீது ‘அட்டாக்'

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு திமுகவின் கனிமொழி எம்பி நேரில் சென்று ஆதரவு வழங்கியதோடு, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்தார்.

kanimohi-mp-supports-cockroach-janta-party-protest-at-jantar-mantar-in-delhi

'நீட்' வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்யக்கோரி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் தொடர்ந்து பேராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு எதிர்க்கட்சியினர், மாணவர் அமைப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திமுகவின் கனிமொழி எம்பி தலைமையில் ராஜ்யசபா எம்பிக்கள், லோக்சபா எம்பிக்கள் நேரில் சென்று போராட்டத்துக்கு ஆதரவு வழங்கினர். இந்த சமயத்தில் கனிமொழி எம்பி, மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அப்போது கனிமொழி எம்பி பேசியதாவது:

''நம் நாட்டின் குழந்தைகள், மாணவ-மாணவிகள் டாக்டராகி, சமூகத்துக்கு சேவையாற்றவும், நாட்டு மக்களுக்கு உதவி செய்யவும் விரும்புகின்றனர். அவர்கள் தங்களின் டாக்டர் கனவை நோக்கி செல்கின்றனர். ஆனால் 'நீட்' நுழைவு தேர்வு என்பது அவர்களின் கனவுக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறது. வசதி படைத்த மாணவர்கள், நகரங்களில் வசிக்கும் மாணவர்கள் மட்டுமே இந்த தேர்வில் வெற்றி பெறுகின்றனர்.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி இருந்தபோது 'நீட்' தேர்வுக்கு எதிராகவே சட்டம் கொண்டு வந்தது. ஆனால் அந்த சட்டம் மட்டுமின்றி பல சட்டங்களை பாஜக அரசு விரும்பவில்லை. இதனால் ஆளுநர் மட்டுமின்றி ஜனாதிபதியும் கையெழுத்திட மறுத்துவிட்டனர். இருப்பினும் தமிழ்நாட்டு மாணவர்கள் தொடர்ந்து 'நீட்' தேர்வுக்கு எதிராக போராடி வருகின்றனர். எங்களின் கட்சியும், தலைவர்களும் நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களின் உரிமைக்காக போராட்டம் நடத்த வேண்டும். தமிழ்நாட்டின் மாணவர்கள் உங்களுக்காக நிற்கிறார்கள். இப்படியானவர்களை இந்திய தேசத்துக்கு எதிரானவர்கள், நகர் நக்சல்கள் என்று முத்திரை குத்தலாம். ஆனால் அதனை பெருமையாக ஏற்று கொண்டு மத்திய அரசுக்கு எதிராக போராட வேண்டும்'' என்றார்.

முன்னதாக கனிமொழி எம்பி தனது எக்ஸ் பக்கத்தில், 'இந்த நாட்டின் இளைஞர்களை 'கரப்பான்பூச்சிகள்' என்று அழைத்ததில் இருருந்து இப்போது மத்திய பாஜக அரசின் கொடூரமான காவல்துறை வன்முறைக்கு ஆளாகி தங்களின் வாழ்விற்காக போராடும் இளைஞர்களின் குரலை கேட்ட நேரமில்லை என்று கூறுவது வரை எடுத்து கொண்டால் நம் நாட்டிடில் நீதியின் நிலைமையை என்னவென்று சொல்வது? இதுபோன்ற தீவிரமான விஷயங்களுக்கே உரிய அவசரம் காட்டப்படாவிவட்டால் சாதார குடிமக்கள் நீதி அமைப்பின் மீது எப்படி நம்பிக்கை வைப்பார்கள்?'' என்று கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+