வாவ்.. நம்ம கனிமொழியா இது.. டெல்லி பார்ட்டியில் உற்சாக விளையாட்டு.. பார்க்கவே செம ஹேப்பி!

டெல்லியில் சக பெண் எம்பிக்களுடன் கை கோர்த்து கனிமொழி விளையாடினார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    பெண் எம்பிக்கள் விளையாடிய வீடியோ

    டெல்லி: கனிமொழி கவிதை எழுதுவார் என்று தெரியும்.. ஆனால் இது புதுசால்ல இருக்கு... பார்க்கவே செம ஹேப்பியாவும் இருக்கு!

    விஷயம் இதுதான்.. மத்திய அமைச்சரவை உணவு துறை அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் தன்னுடைய வீட்டில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

    பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் நாள் என்பதால், தன்னுடைய சக எம்பிக்களை இந்த விருந்துக்கு அழைத்திருந்தார்.

    ஆட்டம், பாட்டம்

    ஆட்டம், பாட்டம்

    இதில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஜவுளித் துறை மந்திரி ஸ்மிருதி இரானி மற்றும் கிர்ரன் கெர் போன்ற பல பாஜக தலைவர்கள் விருந்துக்கு வந்திருந்தார்கள். இவர்களுடன் சரத் பவார் மற்றும் அவரது மகள் சுப்பிரியா சுலேகூட இந்த விருந்தில் கலந்து கொண்டனர். தடபுடலான விருந்து முடிந்ததும் ஒரே ஆட்டம் பாட்டம்தான்.

    விளையாட்டு

    விளையாட்டு

    அதிலும் ஸ்மிருதி இரானி கேட்கவே வேண்டாம்.. கொஞ்சம் மியூசிக் சத்தம் பல்லே...பல்லே... என்று எங்கே கேட்டாலும் உடனே புடவையை வாரி சுருட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்துவிடுவார். நேத்தும் இப்படித்தான் ஒரு டான்ஸ் மற்றும் விளையாட்டு நடந்தது.

    கனிமொழி

    கனிமொழி

    கிர்ரன் கெர், அனுப்பிரியா படேல், ஸ்மிருதி இரானி என எல்லா பெண் எம்பிக்களும் ஒருவருக்கொருவர் கைகளை வளைத்து பிடித்து கோர்த்து கொண்டு விளையாட ஆரம்பித்தனர். இந்த வட இந்திய தலைகளுடன் நம்ம கனிமொழியும் அடக்கம். அனைவருடனும் சேர்ந்து கனிமொழியும் விளையாடி மகிழ்ந்தார்.

    பூரிப்பு.. சந்தோஷம்

    பூரிப்பு.. சந்தோஷம்

    முன்பெல்லாம் சின்னஞ்சிறு பெண்கள் க்ரூப்பாக அல்லது 2 பேர் சேர்ந்து கொண்டு இப்படித்தான் கைகளை பிடித்து கொண்டு தலை கிறுகிறுக்கும் அளவுக்கு சுற்றி விளையாடுவார்கள். (இப்போது இந்த விளையாட்டு காணாமலே போய்விட்டது) எல்லா பெண் எம்பிக்களும் தங்களின் சின்ன வயசு காலத்துக்கு போய்விட்டார்கள் போலும். எல்லார் முகத்திலும் அப்படி ஒரு பூரிப்பு... சந்தோஷம்.

    செல்ல மகள்

    கருணாநிதியின் செல்ல மகளாகவே வளர்ந்த கனிமொழி, கவிஞர், மகளிர் அணி தலைவி, எம்பி என்ற பொறுப்பு, பதவிகளை அடைந்து முக்கிய தலைவராக உயர்ந்துவிட்டாலும், தொலைந்து போன பழைய மழலை நினைவுகள் கனிமொழி முகத்தில் நேற்று தென்பட்டதை நன்றாகவே உணர முடிந்தது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+