தமிழ், இல்லைன்னா ஆங்கிலத்தில் சொல்லுங்க.. அது என்ன ஹிந்தி.. லோக்சபாவில் சீறிய கனிமொழி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழில் சொல்லுங்க இல்லையென்றால் இங்கிலீஷ்ல சொல்லுங்க எனக் கூறி நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர்களிடம் கறார் காட்டியிருக்கிறார் கனிமொழி எம்.பி.

மேலும், எல்லா வாக்குறுதிகளையும் மத்திய அரசு காற்றில் பறக்கவிட்டு விட்டதாக அவர் விமர்சித்தார்.

கனிமொழி இவ்வாறு பேசிக்கொண்டிருக்கும் போதே அதற்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் அந்த சலசலப்பை கண்டு அஞ்சாமல் விலைவாசி உயர்வு பற்றி வெளுத்துக் கட்டினார் கனிமொழி.

கனிமொழி பேச்சு

கனிமொழி பேச்சு

மத்திய அரசின் வாக்குறுதிகள் பல இன்னும் நிறைவேற்றப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி. பேசிக்கொண்டிருந்தார். அப்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறுக்கிட்ட மத்திய அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் கனிமொழிக்கு பதிலடி கொடுத்தனர். இந்தி தெரியலயே, தமிழில் சொல்லுங்க இல்லையென்றால் ஆங்கிலத்தில் சொல்லுங்க எனப் பேசி அந்த தருணத்தில் கூட இருமொழிக் கொள்கையை நாடாளுமன்றத்தில் சூசகமாக உணர்த்தினார்.

காற்றில் வாக்குறுதிகள்

காற்றில் வாக்குறுதிகள்


மேலும், தனக்கு வேறு வழி தெரியவில்லை என்றும் எல்லா வாக்குறுதிகளையும் மத்திய அரசு காற்றில் பறக்கவிட்டு விட்டதாகவும் சாடினார். இதனால் மீண்டும் பாஜக எம்.பி.க்கள் கனிமொழி பேச்சுக்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். ஆனால் அந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாமல் தொடர்ந்து மத்திய அரசு மீதான விமர்சனத்தை நாடாளுமன்றத்தில் முன் வைத்தார். இதனிடையே பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்தால் கருப்பு பணம் ஒழியும் என்றீர்களே எங்கு கருப்பு பணம் ஒழிந்திருக்கிறது என வினவினார்.

இருமொழிக் கொள்கை

இருமொழிக் கொள்கை

ஒன்று தமிழ் இல்லையென்றால் ஆங்கிலம் என கனிமொழி பேசியது இருமொழிக் கொள்கை மீதுள்ள அவரது உறுதியை வெளிப்படுத்தியது. ஒரு பக்கம் கனிமொழி தமிழில் பேச மற்றொரு பக்கம் பாஜக உறுப்பினர்கள் இந்தியில் பேச நாடாளுமன்றமே கலகலத்தது. இதனிடையே இந்த விவாதங்களை வடகிழக்கு மாநில எம்.பி.க்கள் டிரான்ஸ்லேட்டர் ஹெட் போன்ஸ்களை அணிந்துகொண்டு கேட்டதை காண முடிந்தது.

நீண்ட நாட்களுக்கு பிறகு

நீண்ட நாட்களுக்கு பிறகு

நாடாளுமன்ற செயல்பாடுகளில் பொதுவாகவே கனிமொழி சற்று மென்மையான போக்கை கடைபிடிக்கக் கூடியவர். டி.ஆர்.பாலு, திருச்சி சிவா போன்றோர் தான் சற்று ஆவேசமாக பேசி கடுமையான முறையில் எதிர்ப்பை பதிவு செய்யக்கூடியவர்கள். ஆனால் நேற்று நடந்த நிகழ்வு அப்படியே தலைகீழாக அமைந்திருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+