"கால் துண்டானாலும் நிற்காத சாதனை".. கார்கில் போரின் நிஜ ஹீரோவான தேவேந்திர பால் சிங்! யார் இவர்?
டெல்லி: 25வது ஆண்டு கார்கில் விஜய் திவாஸ் என்ற பெயரில் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வேளைியல் நம் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த துணிச்சல் மிக்கி ராணுவ வீரர்கள், அதிகாரிகளை நாம் நினைத்து பார்க்க வேண்டும். இன்னும் பலர் கை, கால்களை இழந்து நாட்டுக்கு சேவையாற்றிய மகிழ்ச்சியில் வாழ்ந்து வருகின்றனர். அப்படியான ஒருவர் தான் ஓய்வு பெற்ற தேவேந்திர சிங் பால்.
தற்போது ஏராளமான இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் தேவேந்திர சிங் பால் கதையை கேட்டால் நமக்கு நிச்சயம் கண்ணீர் வரும். அதேவேளையில் இந்திய ராணுவத்தில் பணியாற்றும் வீரர்கள், அதிகாரிகள் மீதான காதல் நிச்சயம் அதிகரிக்கும். அப்படி தேவேந்திர சிங் பால் என்ன செய்தார்? என்று இந்த செய்தியில் பார்க்கலாம்.

பாகிஸ்தான்.. இந்தியாவின் அங்கமாக இருந்து பிரிந்து போன நாடு. இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஒருநாளுக்கு முன்பாக பாகிஸ்தான் நம் நாட்டில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது. அதாவது 1947 ஆகஸ்ட் 14ல் பாகிஸ்தான் தனி நாடானது. நாம் 1947 ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரம் பெற்றோம்.
நம்மிடம் இருந்து தனியாக பிரிந்த பாகிஸ்தான் என்பது பயங்கரவாதிகளின் கூடாரமாகவே விளங்கி வருகிறது. குறிப்பாக நமக்கு சொந்தமான காஷ்மீரை பாகிஸ்தானோடு சேர்க்க வேண்டும் என்று பாகிஸ்தான் கூறி வரும் சூழலில், காஷ்மீரில் அமைதியை சீர்க்குலைக்கும் நாச வேலைகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரின் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயன்றபோது தான் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் வெடித்தது.
"திருந்தாத பாகிஸ்தான்".. பிரதமர் மோடி கொடுத்த ‛வார்னிங் மெசேஜ்’..கார்கில் விஜய் திவாஸில் ‛அட்டாக்’
அதாவது 1999ம் ஆண்டில் நமக்கு சொந்தமான கார்கில் பகுதியை பாகிஸ்தான் கைப்பற்ற திட்டமிட்டு அதற்கான வேலைகளை தொடங்கியது. பாகிஸ்தானின் இந்த சதித்திட்டத்தை நம் நாட்டு வீரர்கள் களமிறங்கினர். பாகிஸ்தானை எதிர்த்து ராணுவ வீரர்கள் சண்டையிட்டனர். இந்த போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இறுதியில் நம் நாட்டின் ராணுவ வீரர்களின் அசத்தலான செயல்பாட்டால் பாகிஸ்தான் தோற்றுப்போனது. கார்கிலை கைப்பற்றும் முயற்சியை கைவிட்டு பாகிஸ்தான் பின்வாங்கியது.
கார்கிலை ஆக்கிரமித்து சொந்தம் கொண்டாட முயன்ற பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 4,000-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
இருப்பினும் 2 மாதம் நடந்த போரில் நமது ராணுவத்தை சேர்ந்த வீரர்கள், அதிகாரிகள் என்று 527 பேர் நாட்டுக்காக வீர மரணம் அடைந்தனர். 1,363 ராணுவ வீரர்கள் படுகாயமடைந்தனர். இந்திய வரலாற்றிலும் சரி, இந்திய ராணுவத்தின் ஹிஸ்டரியிலும் சரி. கார்கில் போர் என்பது நம் நாட்டு படை வீரர்களின் வீரத்துக்கு கிடைத்த வெற்றி என்று உள்ளது.
இந்நிலையில் தான் கார்கில் யுத்தத்தின் 25வது ஆண்டு வெற்றி தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுவாக கார்கில் வெற்றி தினம் என்பது கார்கில் விஜய் திவாஸ் என கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று 25வது கார்கில் விஜய் திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ஜம் மு காஷ்மீரின் கார்கில் போர் நினைவிடத்திற்குச் சென்று உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு வீர வணக்கம் செய்து மரியாதை செலுத்தினார்.
கார்கில் விஜய் திவாஸ் 2024: திராஸ் போர் நினைவிடத்தில் இன்று வீரவணக்கம் செலுத்துகிறார் பிரதமர் மோடி!
இத்தகைய சூழலில் தான் கார்கில் போரில் ஹீரோக்களாக ஜொலித்த ராணுவ அதிகாரிகள், வீரர்கள் பற்றிய முக்கிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அதில் ஒருவர் தான் கார்கில் போரில் நடந்த வெடிகுண்டு வெடிப்பில் ஒரு காலை இழந்த ஹரியானா மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஓய்வு பெற்ற மேஜர் தேவேந்திர பால் சிங் என்ற டிபி. இவர் 1973ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி பிறந்தார்.
இவர் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். குறிப்பாக கார்கில் போரில் இந்தியாவை வெற்றி பெற வைக்க தீவிரமாக செயல்பட்டார். தனது துடிப்பு மிக்க 26 வயதில் அவர் பாகிஸ்தான் ராணுவத்தை எதிர்த்து போரிட்டார். இளங்கன்று பயமறியாது என்ற சொல்லுக்கு ஏற்க தேவேந்திர சிங் பாலின் செயல்பாடு என்பது இருந்தது. பாகிஸ்தானை சேர்ந்த எதிரிகளை நேரடியாக தாக்கினார். இந்திய ராணுவத்தில் தான் கற்ற மொத்த வித்தைகளையும், திறமைகளையும் கார்கில் போரில் அவர் இறக்கினார். இதனால் எதிரிகளுக்கு அவர் சிம்ம சொப்பணமாக திகழ்ந்தார்.
இந்த சமயத்தில் தான் அந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் 1999 ஜூலை 15ம் தேதி நடந்தது. அன்றைய தினம் தேவேந்தர் பால் சிங் எதிரிகளை வீழ்த்தியபடி முன்னேறி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரிகளின் நிலைக்கும், தேவேந்தர் பால் சிங் இருந்த இடத்துக்கும் வெறும் 80 மீட்டர் மட்டுமே இருந்தது. இந்த சமயத்தில் தான் அவர் அருகே வெடிகுண்டு வெடித்தது.
பாகிஸ்தானின் Mortar வகை வெடிகுண்டு அவர் இருந்த இடத்தின் அருகே வெடித்தது. அப்போது தான் அவர் மரணத்தின் எல்லை வரை சென்று வந்தார்.
இந்த தாக்கதலில் தேவேந்திர பால் சிங்கின் காலில் அடிப்பட்டது. போர் பரபரப்பாக நடந்து கொண்டிருந்த அந்த சமயத்தில் காலில் காயமடைந்த தேவேந்தர் பால் சிங்கை உடனடியாக அகதிகள் முகாமுக்கு மீட்டு வர வீரர்களால் முடியவில்லை. அதன்பிறகு வீரர்களில் ஒரு குழுவினர் பாகிஸ்தான் எதிர்க்க இன்னொரு தரப்பினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இந்த சிகிச்சை ஓரளவு பலனளித்தாலும் கூட அவரால் நடக்க முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். மூட்டு பகுதியில் அடிப்பட்டதால் செயற்கை மூட்டுடன் கூடிய கால் பொருத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.
10 ஆண்டுகளுக்கு பிறகு சிகிச்சையின் பலனாக செயற்கை கால் பொருத்தப்பட்டு அவர் மீண்டும் நடக்க தொடங்கினார். இப்படி இந்திய ராணுவத்தின் ஓய்வு பெற்ற மேஜர் தேவேந்தர் பால் சிங் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார். அவரது எண்ணம் என்பது இப்போதும் ஒன்றாக தான் இருக்கிறது. அதாவது எத்தகைய தடைகள் வந்தாலும் அதனை எதிர்த்து போராட வேண்டும். பின்னடைவை சந்திக்க கூடாது. ஒருவேளை பின்னடைவு வந்தால் அதில் இருந்து முன்னேறி வர வேண்டும் என்ற நிலைப்பாட்டை தான் அவர் கொண்டுள்ளார். இதனால் தான் தேவேந்தர் பால் சிங் இன்றும் பல இளைஞர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக உள்ளார்.
இவர் செயற்கை மூட்டு பயன்படுத்தி வருகிறார். மேலும் அவர் ஓட்டப்பந்தயங்களில் பங்கேற்க தொடங்கினார். அதன்படி அவர் முதல் Blade Runner என்ற பெருமையை பெற்றுள்ளார். இதுவரை 26 மாரத்தான் (Half Marathons) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். ஆன்லைனில் வீடியோக்களை அவர் வெளியிட்டு வருகிறார். "Never Say Die" என்ற தலைப்பில் சீரிஸாக அவர் பேசி இளைஞர்களை ஊக்கப்படுத்தி வருகிறார். இதில் அவர் ராணுவம் குறித்த சுவாரசிய தகவல்களை பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமின்றி ஆபத்தில் இருந்து ராணுவ வீரர்கள், அதிகாரிகள் செயல்பட்டது எப்படி? உயிர் தப்பியது எப்படி? தொடர்பான விபரங்களை வெளியிட்டு வருகிறார்.
இதுதவிர தேவேந்திர பால் சிங் டிசிஓ எனும் தி சேலஞ்சிங் ஒன் எனும் கம்யூனிட்டியை தொடங்கி நடத்தி வருகிறார். இதன் மூலம் மாற்றத்திறனாளிகளுக்கு தேவையான ஊக்கத்தை அவர் வழங்கி வருவதோடு, அவர்களுக்கான உதவிகளையும் செய்து வருகிறது. இப்படி கார்கில் போரில் நம் நாட்டுக்காக ஒரு காலை இழந்தும் கூட சோகத்தில் முடங்கிவிடாமல் பல இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுதாரணமாக விளங்கும் ஓய்வு பெற்ற இந்திய ராணுவ மேஜர் தேவேந்திர பால் சிங்கை இந்த நாளில் நாமும் பாராட்டுவோம்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications