கர்நாடகாவில் அடித்து நொறுக்கும் பாஜக.. பிரஜ்வலுக்கும் வெற்றி தானாம்! டிவி 9 எக்ஸிட் போல் சர்வே
டெல்லி: கர்நாடக மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் பாஜக அதிகபட்சமாக 18 இடங்களில் வெல்லும் என்றும் காங்கிரஸ் 8 இடங்களில் வெல்லும் என்றும் டிவி 9 போல்ஸ்ட்ராட் எக்ஸிட் போல் முடிவுகளில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த முறை மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதலாம் கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று கடைசிக் கட்ட தேர்தல் நடைபெற்றது.

நமது நாட்டில் 543 தொகுதிகள் இருக்கிறது.. அதில் எந்தவொரு கட்சி அல்லது கூட்டணி 272 தொகுதிகளில் வெல்கிறதோ அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கும். ஆட்சியையும் அமைக்க முடியும்.
இந்த முறை தேசியளவில் பார்க்கும் போது பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவி வருகிறது. இரு தலைவர்களும் கடுமையான பிரச்சாரம் செய்தனர். வாக்குப்பதிவு இப்போது முடிந்துள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதற்கிடையே இன்று லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துவிட்ட நிலையில், இப்போது பல்வேறு ஊடகங்களும் எக்ஸிட் போல் எனப்படும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது.
அதன்படி இப்போது டிவி 9 போல்ஸ்ட்ராட் கர்நாடகாவில் தேர்தலுக்கு பிந்தைய சர்வேயை வெளியிட்டுள்ளது. இதில் கர்நாடகாவில் ஆளும் கட்சியாக இருந்தாலும் காங்கிரஸ் 8 இடங்களில் மட்டுமே வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் கர்நாடகாவில் மொத்தம் இருக்கும் 28 தொகுதிகளில் பாஜக 18 தொகுதிகளில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்குக் கூட்டணியில் உள்ள ஜேடிஎஸ் இரண்டு இடங்களில் வெல்லும் என கூறப்பட்டுள்ளது. இதில் பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் தொகுதியிலும் அவர் வெல்வார் எனக் கூறப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் கடந்த காலங்களில் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பாஜகவே லோக்சபா தேர்தலில் அதிக இடங்களில் வென்று வந்த நிலையில், இந்த முறையும் அது தொடர்கிறது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications