ஹெலிகாப்டரை கடலுக்குள் இழுத்த சுறா மீன்.. உண்மை என நினைத்த கிரண் பேடி.. கேலிக்குள்ளான ட்வீட்!
டெல்லி: புதுச்சேரியின் முன்னாள் துணை நிலை ஆளுநராக இருந்த கிரண் பேடி தனது ட்விட்டரில் ஒரு சினிமா காட்சி வீடியோவை நிஜமான சம்பவம் என நினைத்து பதிவிட்டதால் அவரது ட்வீட் கிண்டலுக்குள்ளாகியது.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான கிரண் பேடி புதுவைக்கு துணை நிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். ஆனால் அங்கு ஆளும் கட்சியாக காங்கிரஸின் முதல்வர் நாராயணசாமியுடன் மல்லுக்கட்டி வந்தார்.
அதாவது மாநில உரிமைகளில் கிரண்பேடி தலையிடுகிறார். கோப்புகளை காலதாமதப்படுத்துகிறார் என்றெல்லாம் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் துணை ஆளுநர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

தமிழிசை
இதையடுத்து துணை நிலை ஆளுநராக தமிழிசை சவுந்திரராஜன் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கிரண் பேட்டி அவ்வப்போது சமூகம் சார்ந்த ட்வீட்களை பதிவிட்டு வருவார். அது போல் சட்டம் ஒழுங்கு குறித்த ட்வீட்களையும் ஆப் பீட்டுகளையும் பதிவிட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இவர் இன்று பதிவிட்ட ஒரு விஷயம் பெரும் கேலி பொருளாகிவிட்டது.
|
சுறா மீன் தாக்குதல்
ஒரு கடலில் ஹெலிகாப்டரை சுறா மீன் தாக்குதல் நடத்தி, கடலுக்குள் இழுத்துக் கொள்ளும் காட்சி அடங்கிய வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட அவர் இந்த அரிய வகை வீடியோவிற்காக நேஷனல் ஜியோகிராபிக் சேனல் 1 மில்லியன் டாலர் செலவு செய்துள்ளது என கூறியுள்ளார்.

பிரபல புரளி
உடனே நம்ம நெட்டிசன்கள் அவரை கலாய்க்க தொடங்கிவிட்டார்கள். இது உண்மையான வீடியோ அல்ல, சினிமா காட்சி என ரிப்ளைகள் குவிந்தன. மேலும் 2017 ஆம் ஆண்டு வெளியான 5 headed Shark Attack படத்தில் எடுக்கப்பட்ட காட்சி மிகவும் வைரலானது. மேலும் இந்த காட்சிக்காக நேஷனல் ஜியோகிராபிக் சேனல் ஒரு மில்லியன் டாலர் செலவு செய்ததாக சொல்லப்படுவது மிக பிரபலமான இணையதள புரளி என பலர் பேக்ட் செக் மூலம் தெரிவித்து வருகிறார்கள்.

டெலிட் செய்யுங்கள்
இன்னும் சிலர் மேடம் இந்த ட்வீட்டை டெலிட் செய்யுங்கள். அது சினிமா காட்சி என்கிறார்கள். இதனால் சுதாரித்த கிரண் பேடி சமாளித்து ட்வீட் போட்டுள்ளார். அதில் அதே வீடியோவை வெளியிட்டு இந்த வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பது தற்போது தெரிந்து விட்டது. என்னதான் உண்மையான சோர்ஸாக நம்பக் கூடியதாக இருந்தாலும் இதை பார்ப்பதற்கு பயங்கரமாகவே இருக்கிறது. எனினும் இந்த வீடியோ பாராட்டுக்குரியதே. இதை எச்சரிக்கையுடனே பாருங்கள் என கிரண் பேடி ட்வீட் போட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications