துப்பாக்கியுடன் இறங்கிய போலீஸ்? கரப்பான் பூச்சி கட்சியை ஒடுக்க பார்த்த மத்திய அரசு? வந்த புதிய தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற Gen Z மாணவர்களின் நீட் வினாத்தாள் லீக் போராட்டத்தில் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக எதிர்க்கட்சிகள் முன்வைத்த குற்றச்சாட்டை மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மறுத்துள்ளார். போராட்டத்தில் பெரியளவில் யாரும் காயமடையவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் லீக் உள்ளிட்ட விவகாரங்களை கண்டித்து கரப்பான் பூச்சி கட்சியினர் டெல்லியில் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு நாடு முழுக்க மக்களிடையே ஆதரவு கிடைத்தது. மத்திய அரசுக்கு பிரஷர் அதிகரித்த நிலையில், மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியையும் ராஜினாமா செய்தார்.

Kiren Rijiju neet protest neet protest Cockroach Janata party

பெல்லட் குண்டுகள்

போராட்டம் தீவிரமாக நடந்த போது, ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி நடைபெற்ற மாணவர் பேரணி நடைபெற்றது. போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்தன. குறிப்பாக, போராட்டக்காரர்களை கலைக்க பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாகவும் எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்திருந்தன. மாணவர்கள் மீது இதுபோன்ற அதீத வன்முறை பயன்படுத்தப்பட்டு இருக்கக்கூடாது என எதிர்க்கட்சிகள் சாடின. இது தொடர்பாக மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தையும் கூட முடக்கினர்.

மத்திய அரசு விளக்கம்

இதற்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர் நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்தியா டுடே செய்தி சேனலுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் போராட்டத்தில் பெரியளவில் யாரும் காயமடையவில்லை என்றும் போலீசார் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்ற போராட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்திருப்பார்கள் என்று ரிஜிஜு சாடினார். அவர் மேலும், "பெல்லட் துப்பாக்கியில் பல பெல்லட்டுகள் இருக்கும். அது ஒரு தோட்டா மட்டுமல்ல. ஒருவருக்கு மட்டும் காயம் ஏற்பட்டிருந்தால், அது எப்படி நடந்தது என்பதையும் பார்க்க வேண்டும். ஆயிரக்கணக்கானோர் இருந்த போராட்டத்தில் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் பலர் காயமடைந்திருப்பார்கள்.

400 பேர்

4,000 முதல் 5,000 பேர் போராட்டத்தில் அமர்ந்திருந்த நிலையில் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் குறைந்தது 300 முதல் 400 பேர் காயமடைந்திருப்பார்கள். இந்த விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் உள்ளன. நீதிமன்றம் முதலில் இந்த விவகாரத்தை விசாரிக்கும். எனவே, தற்போதைய நிலையில் இதுகுறித்து எதுவும் கூற முடியாது" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாடாளுமன்ற பேரணியில் 30,000 முதல் 40,000 பேர் ஒன்று திரண்டனர். போலீசார் போராட்டத்தை சிறப்பாக கையாண்டனர். 30,000-40,000 பேர் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக வந்தால், அவர்களை தடுப்பது போலீசாரின் கடமை தானே? அதற்காக போலீசார் சரியான நடவடிக்கையையே எடுத்தனர்" என்றார்.

நீதிமன்றத்தில் வழக்கு

பெல்லட் குண்டு விவகாரம் பெரிதாக வெடித்துள்ளது. ஜூலை 20ஆம் தேதி போராட்டத்தின்போது பெல்லட் குண்டு தாக்கியதில் சிலர் காயமடைந்ததாக பல ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறிப்பாக 25 வயதான போராட்டக்காரர் ஒருவருக்கு சுமார் 20 பெல்லட் காயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. இருப்பினும், பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை டெல்லி போலீசார் மறுத்திருந்தனர். இது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க ஆகஸ்ட் 13ஆம் தேதியுடன் மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்தது. மாணவர் போராட்டத்தில் போலீஸ் நடவடிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளும் ஆளும் கட்சி-எதிர்க்கட்சிகளுக்கு இடையிலான மோதல் காரணமாக பெரும்பாலும் நாடாளுமன்றம் முடங்கியது. அவை கூடுவது, பிறகு ஒத்திவைக்கப்படுவது மட்டுமே மாறி மாறி நடந்து வந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+