கல்யாணமான மறுநாள் பாத்ரூம் சென்ற மணப்பெண்! "ஒரே அலறல்.." மாமியார் வீட்டில் இரண்டாம் நாளே.. கொடூரம்!

மாமியார் வீட்டில் குளிக்கச் சென்ற புது பெண் திடீரென உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாமியார் வீட்டில் குளிக்கச் சென்ற புது பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் ஹீட்டர் லீக்கால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நமது வாழ்க்கையை ஈஸியாக்க இப்போது ஏகப்பட்ட கருவிகள் வந்துவிட்டன. காலை எழுந்தது முதல் இரவு தூங்குவது வரை நமது வாழ்க்கையை ஈஸியாக்க இப்படி ஏகப்பட்ட கருவிகள் வந்துவிட்டன.

இருப்பினும், இந்த கருவிகளை நாம் பாதுகாப்பாகப் பயன்படுத்தவில்லை என்றால் இதனால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் சூழல் உள்ளது. அப்படியொரு சம்பவம் தான் நெட்டிசன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குளிக்கச் சென்ற புது பெண்

குளிக்கச் சென்ற புது பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் நகரில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குக் குளிக்கும் போது ஹீட்டரில் கசிவு ஏற்பட்டதில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு புது மணப்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில நாட்களே ஆன அந்த பெண், குளிப்பதற்குத் தனது மாமியார் வீட்டில் குளியலறைக்குச் சென்றுள்ளார். இருப்பினும், நீண்டே நேரம் ஆகியும் இந்த பெண் வெளியே வரவில்லை என்று தெரிகிறது. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் கதவைத் தட்டியுள்ளனர்.

உயிரிழப்பு

உயிரிழப்பு

இருந்த போதிலும், பெண் கதவைத் திறக்கவில்லை.. இதையடுத்து குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு சென்று பார்த்த போது தான் ஷாக் ரூமில் ஒரு மூலையில் அந்த பெண் மயக்கமடைந்த நிலையில் இருந்ததை குடும்பத்தினர் கண்டறிந்தனர். இதனால் பதறியடித்துக் கொண்டு அந்த பெண்ணை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மருத்துவமனையில் பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகக் கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹீட்டரில் இருந்து ஏற்பட்ட கசிவே அந்த பெண் உயிரிழக்கக் காரணமாக அமைந்துள்ளது.

கேஸ் ஹீட்டர்

கேஸ் ஹீட்டர்

கேஸ் அடிப்படையிலான ஹீட்டர்களை (Gas geysers) பயன்படுத்தும் போது இந்த சிக்கலுக்கு வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து சற்று விரிவாகப் பார்க்கலாம். இந்த கேஸ் ஹீட்டர்கள் கார்பன் மோனாக்சைடை வெளியிடும் என்று சொல்லப்படுகிறது. இதை சில நிமிடங்கள் சுவாசிப்பதே ஆபத்தானது.. இதனால் வெகு விரைவில் ஒருவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும். கார்பன் மோனாக்சைடு சுவாசிப்பதால் ஏற்படும் மூச்சுத் திணறலை வீட்டில் இருக்கும் விஷயங்களை வைத்துக் குணப்படுத்த முடியாது..

மூச்சுத் திணறல்

மூச்சுத் திணறல்

இந்த விஷயத்தில் சம்மந்தப்பட்ட நபருக்கு உடனடி மருத்துவச் சிகிச்சை தேவைப்படும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். கேஸ் ஹீட்டரை பயன்படுத்தும் போது வலிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.. எனவே இந்த டைப் ஹீட்டரை பயன்படுத்தினால், குறைந்தபட்சம் ஒரு ஜன்னல் கொண்ட நன்கு காற்றோட்டமான குளியலறையில் குளிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.

கார்பன் மோனாக்சைட்

கார்பன் மோனாக்சைட்

கார்பன் மோனாக்சைடை சுவாசிக்கும் போது ஏற்படும் வாந்தி, வலிப்பு, குமட்டல், தலைவலி, மயக்கம் உள்ளிட்டவை ஏற்படும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. சில அரிய நேரங்களில் மூளையில் நிரந்தர பாதிப்பு கூட ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பாலான நேரங்களில் இது சிகிச்சையால் குணப்படுத்தக் கூடியவையாகவே இருக்கும்.. ஐந்து நிமிடங்களுக்கு மேல் வாயுவை சுவாசித்தால் தலைச்சுற்றல் ஏற்படலாம். அதையே தொடர்ந்து சுவாசித்தால் மயக்கம் கூட ஏற்படும் ஆபத்து உள்ளது.

பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி

பாதுகாப்பாக பயன்படுத்துவது எப்படி

ஹீட்டரில் கசிவு எதாவது உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும்.. ஹீட்டரை பயன்படுத்தும் போது எக்ஸாஸ்ட் ஃபேனை சேர்த்துப் பயன்படுத்தவும். லீக் இருந்தால் ஹீட்டரை பயன்படுத்த வேண்டாம். ஜன்னல் இருக்கும் குளியலறையில் ஹீட்டரை பயன்படுத்தவும். அதேபோல ஹீட்டரை பயன்படுத்திக் குளிக்கும் போது, மயக்கம் அல்லது மூச்சுத் திணறல் ஏற்படுவது போன்ற உணர்வு ஏற்பட்டால் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+