காதலியின் நாயை தூக்கில் தொங்கவிட்டு வீடியோ கால்.. சைக்கோ இளைஞரின் கொடூரம்! திக்திக் சம்பவம்
டெல்லி: காதலி தன்னை பிரிந்து சென்ற ஆத்திரத்தில், அந்த பெண் வளர்ந்து வந்த இரண்டு நாய்களையும் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொன்ற சம்பவம் கொல்கத்தாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நாயை தூக்கில் தொங்கவிட்டதுடன், அதை வீடியோ காலில் முன்னாள் காதலிக்கு காட்டியதாகவும் கூறப்படுகிறது. மற்றொரு குட்டி நாயை செங்கல்லால் அடித்தே கொன்றுள்ளார்.
பிரேக்அப் ஆகும் போது இந்த காலத்தில் பெரும்பாலானோர் அதை புரிந்து கொண்டு அடுத்த வேலையை பார்க்க போகிறார்கள். ஆனால், சிலர் பிரேக் அப் ஆவதை ஏற்க முடியாமல் கொடூரமான விஷயங்களை செய்கிறார்கள். சில சைக்கோ இளைஞர்கள் மிக மோசமான நிலைமைக்கும் சென்றுவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

கொடூரமாக கொலை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் இளைஞர் ஒருவர் தனது முன்னாள் காதலியின் நாயை கொடூரமாக கொன்றுள்ளான். கொல்கத்தா மாநிலம் பிக்ரம்கர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் இந்த சம்பவம் நடந்துள்ளது. சஞ்சீப் பட்டாச்சார்யா என்ற அந்த இளைஞரை இப்போது போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சஞ்சீப் பட்டாச்சார்யாவும், டிஜேவாக பணியாற்றும் பெண் ஒருவரும் பிக்ரம்கரில் உள்ள வாடகை வீட்டில் லிவ்-இன் உறவில் வசித்து வந்துள்ளனர். அண்மையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரேக் அப் செய்து கொண்டனர். அந்த பெண் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது தனது இரண்டு வளர்ப்பு நாய்களையும் சஞ்சீப்பின் பராமரிப்பில் விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
சைக்கோ
அந்த பெண் தன்னை பிரிந்து சென்ற ஆத்திரத்தில் சஞ்சீப் நாய்களை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. அதுதான் இப்போது நாய்களை கொலை செய்வதில் முடிந்துள்ளது. ஒரு நாயின் கழுத்தில் கயிற்றை கட்டித் தூக்கில் தொங்கவிட்ட அந்த சைக்கோ, இதை வீடியோ கால் செய்து முன்னாள் காதலிக்கு காட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக அந்த பகுதியில் உள்ள தனது நண்பரை தொடர்பு கொண்டு, உடனடியாக வீட்டுக்கு சென்று நாயை பார்க்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
செங்கல்லால் அடித்து கொலை
இதையடுத்து அந்த இளைஞரும், அப்பகுதியை சேர்ந்த சிலரும் சஞ்சீப் வீட்டுக்கு சென்று பார்த்தபோது இரண்டு நாய்களும் கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. ஒரு நாய் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது. மற்றொரு குட்டி நாயின் தலையில் செங்கல்லால் அடித்து கொலை செய்திருந்ததாக விலங்குகள் நல ஆர்வலர் ஒருவர் தெரிவித்தார். வீட்டின் தரை முழுவதும் ரத்தம் சிதறி கிடந்ததாகவும் கூறப்படுகிறது.
கைது
பொதுமக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, சஞ்சீப் சமையலறையில் தண்ணீரை கொதிக்க வைத்து கொண்டிருந்தாராம். நாய்கள் மீது கொதிக்கும் நீரை ஊற்றத் திட்டமிட்டாரா அல்லது தடயங்களை அழிக்க தண்ணீரை கொதிக்க வைத்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இது குறித்து தகவலறிந்த நடிகையும் விலங்குகள் நல ஆர்வலருமான டெப்லீனா தத், விலங்குகள் நல அமைப்பினருடன் சம்பவ இடத்துக்குச் சென்றார். அப்போது சஞ்சீப் காதலி பிரிந்ததால் நாய்களை கொன்றதை ஏதோ சாதனை போல பெருமையாக சொல்லி கொண்டு இருந்துள்ளார்.
சஞ்சீப் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருந்ததாக கூறப்படும் நிலையில், அவருக்கு மருத்துவ சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவரை இப்போது கைது செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.




Click it and Unblock the Notifications
