Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேர்தலுக்கு பக்கா பிளான்? கொல்கத்தா-கவுகாத்தி வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்! மோடி தொடக்கி வைக்கிறார்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்திற்கும் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாநிலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்திருந்தார். இதனை தொடர்ந்து தற்போது இரு மாநில தலைநகரை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை விரைவில் மோடி தொடங்கி வைப்பார் என அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னர் வந்தே பாரத் ரயில்கள் ஸ்லீப்பர் வசதியுடன் இயக்கப்பட்டது கிடையாது. அந்த வகையில் கொல்கத்தா-கவுகாத்தி இடையே இயக்கபடுகிற இந்த ரயில்தான், வந்தே பாரத்தில் படுக்கை வசதியுடன் இயக்கப்படும் முதல் ரயிலாகும். மோடி விரைவில் இந்த சேவையை கொடியசைத்து தொடங்கி வைக்கவுள்ளார்.

Kolkata Guwahati Vande Bharat

வந்தே பாரத்

கொல்கத்தா மற்றும் கவுகாத்தி இடையே இயக்கப்படவுள்ள இந்த ரயில் சேவையின் மூலம், விமானப் பயணத்தை விடக் கட்டணங்கள் கணிசமாகக் குறையும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். அடுத்த 15 முதல் 20 நாட்களில், அதாவது ஜனவரி 18 அல்லது 19 தேதிகளில் இந்தச் சேவை தொடங்கலாம் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

டிக்கெட் எவ்வளவு?

பிரதமரின் ஒப்புதல் பெறப்பட்டு, அனைத்து அம்சங்களும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளன. சரியான துவக்கத் தேதியை அடுத்த இரண்டு மூன்று நாட்களில் அறிவிப்பேன் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். கவுகாத்தி-ஹவுரா விமானப் பயணச் செலவு சுமார் ₹6,000 முதல் ₹8,000 வரை இருக்கும் நிலையில், வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் 3-ஆம் வகுப்பு ஏ.சி. கட்டணம் உணவுடன் சேர்த்து சுமார் ₹2,300 ஆக இருக்கும்.

இந்த ரயிலின் 2-ஆம் வகுப்பு ஏ.சி. கட்டணம் சுமார் ₹3,000 ஆகவும், 1-ஆம் வகுப்பு ஏ.சி. கட்டணம் சுமார் ₹3,600 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினரைக் கருத்தில் கொண்டு இந்தக் கட்டணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் சந்தேகம்

எல்லாம் ஓகேதான். ஆனால், அதிக அளவில் மக்கள் பயணிக்கும் ரயில் வழித்தடத்தில் முதலில் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில்களை அறிமுகப்படுத்தியிருக்கலாமே! என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். டெல்லி-கொல்கத்தா ரயில் வழித்தடம்தான் நாட்டில் மிகவும் பிஸியான, அதிக வருவாய் ஈடுட்டும் வழித்தடம். இந்த தடத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆனால், அதில் ஸ்லீப்பர் வசதிகள் கிடையாது.

தேர்தல்கள்

இந்த தடத்தில் புதிய ரயில்களை இயக்காமல், விரைவில் தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநிலத்தை கருத்தில் கொண்டு, கொல்கத்தா-கவுகாத்தி இடையே ஸ்லீப்பர் வந்தே பாரத் ரயில்களை அறிமுகப்படுத்துவது ஏன்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

அசாமில் பாஜக

அசாம் மாநிலத்தை பொறுத்தவரை அங்கு பாஜகதான் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது. ஆனால் கடந்த காலங்களில் இம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா பிறப்பித்திருக்கும் சட்டங்கள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக சர்ச்சைக்குரிய பொது சிவில் சட்டம், மாட்டை கடத்தினால் சொத்துக்கள் பறிமுதல், கோயில்களை சுற்றி 5 கி.மீ சுற்றளவுக்கு மாட்டிறைச்சிக்கு தடை உள்ளிட்டவையும், இந்துக்கள் ஒரு குழந்தையுடன் நிறுத்திக்கொள்ளக்கூடாது, 2-3 பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பிஸ்வா பேசியிருப்பதும் விவாதங்களாக மாறியிருக்கிறது.

சர்ச்சை சட்டங்கள்

எனவே, ஆங்காங்கே இந்த சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நிலைமையை மீண்டும் இயல்பாக்கவும், பாஜக அரசு அசாமுக்கு துணை நிற்கிறது என்பதை வெளிப்படுத்தவும் பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அசாமுக்கு அறிவித்து வருவதாக விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

நலத்திட்டங்கள்

கடந்த டிச.19ம் தேதி அசாம் பயணம் மேற்கொண்டிருந்த பிரதமர் மோடி, கவுகாத்தியில் புதிய விமான முனையத்தை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து தற்போது வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை தொடங்க உள்ளதும், தேர்தலை மனதில் வைத்துதான் என்று சொல்லப்படுகிறது.

மேற்கு வங்கம்

அதேபோல மேற்கு வங்க மாநிலத்தை பொறுத்தவரையில் அங்கு திரிணாமுல் காங்கிரஸ் அதிகாரத்தில் இருக்கிறது. ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட் கோட்டையாக இருந்த இந்த பகுதியில் கம்யூனிஸ்ட் தடம் தெரியாமல் காணாமல் போயிருக்கிறது. எனவே திரிணாமுல் காங்கிரஸ் vs பாஜகவுக்கு நேரடி போட்டி உருவாகியிருக்கிறது. இந்த போட்டியில் ஜெயிக்கவே, கொல்கத்தாவுக்கு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை மோடி தொடங்குகிறார் என்றும் சொல்லப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+