காங்கிரஸில் இருந்து விலகிய கையோடு.. பாஜகவில் ஐக்கியமானார் நடிகை குஷ்பு!
டெல்லி: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கையோடு டெல்லி பாஜக தலைமை அலுவலகத்தில் தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் குஷ்பு அக்கட்சியில் இணைந்தார். அவருடன் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் இருந்தார்.
Recommended Video
அகில இந்திய காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கடந்த சில தினங்களாக டுவிட்டரில் மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையை ஆதரித்து பதிவிட்டார்.
அதுபோல் உள்துறை மந்திரி அமீத்ஷா மருத்துவமனையில் இருந்த போது நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

நேற்று டெல்லி பயணம்
இதையடுத்து கடந்த சில தினங்களாக நடிகை குஷ்பு பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக கூறப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் டெல்லி சென்றுவிட்டு வந்த நடிகை குஷ்பு திடீரென நேற்று இரவு 9.30 மணிக்கு டெல்லி செல்லும் விமானத்தில் பயணம் செய்ய வந்தார்.

நோ கமெண்ட்ஸ்
அப்போது அவரிடம் நீங்கள் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வருகிறதே.. உண்மையா என்று கேட்டதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். மேலும் அவரிடம் நீங்கள் காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து நீடிக்கிறீர்களா என்று கேட்டதற்கு நோ காமண்ட்ஸ். கருத்து கூற விரும்பவில்லை என்று கூறிவிட்டு சென்றார்.

சிறப்பான வரவேற்பு
இந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்போது விலகினார். இதனால் அவரது கட்சித் தாவல் உறுதியானது. இந்த நிலையில் அவர் டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்தார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாஜகவில் குஷ்பு ஐக்கியம்
பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டாவிடம் ஆசி பெற்றார். இதையடுத்து தேசிய பொதுச் செயலாளர் சி.டி. ரவி முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைந்துவிட்டார். அவருக்கு பாஜக அடிப்படை உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றிக்கு பாடுபடுவேன் என குஷ்பு தெரிவித்தார்.
-
எக்ஸாம்ல பாஸ் பண்ணுங்க.. பதவியை அள்ளுங்க! அண்ணாமலையின் அடடே ப்ளான்! இது லிஸ்ட்லயே இல்லையே! -
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
சோனம் வாங்சுக் மத்திய கல்வி அமைச்சராக பொறுப்பேற்க வேண்டும்! கரப்பான் பூச்சி ஜனதா கட்சி வலியுறுத்தல்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை?












Click it and Unblock the Notifications