Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Jana Nayagan: சுப்ரீம் கோர்ட்டை நாடிய ஜனநாயகன் படக்குழு.. அவசர முறையீடு! பொங்கலுக்கு வெளியிட தீவிரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' பட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது KVN ப்ரொடக்‌ஷன்ஸ். ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் மறு தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று ஜனவரி 9 ஆம் தேதி ஜனநாயகன் படம் திட்டமிட்டபடி ரிலீஸ் செய்யப்படவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜனநாயகன் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான KVN புரொடக்‌ஷன்ஸ் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பிடி ஆஷா, ஜனநாயகன் திரைப்படத்துக்கு U/A தணிக்கை சான்றிதழ் வழங்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார்.

Jana nayagan vijay supreme court

ஆனால் நீதிபதி பிடி ஆஷாவின் இந்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு உடனடியாக மேல்முறையீடு செய்தது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்த்வா, நீதிபதி அருள் முருகன் அமர்வில் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கு விசாரணையின்போது, மனுவில் கோரப்படாத நிவாரணத்தை தயாரிப்பு நிறுவனத்துக்கு தனி நீதிபதி அளித்துள்ளார் என தணிக்கை வாரியம் தரப்பு வாதம் வைத்தது. மேலும், சென்சார் போர்டு பதில் அளிக்க கால அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் வாதம் வைக்கப்பட்டது.

இதையடுத்து, தலைமை நீதிபதி, சரமாரியாக கேள்வி எழுப்பினார். குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட வேண்டும் என நீதிமன்றத்தை ஏன் அவசரப்படுத்துகிறீர்கள்? படக்குழு காத்திருந்தால் என்ன பிரச்சனை? சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்கு முன்பே படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்தது ஏன்? நீங்கள் ரிலீஸ் தேதியை அறிவித்து விட்டீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? என தலைமை நீதிபதி அமர்வு, ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் தரப்புக்கு சரமாரி கேள்வி எழுப்பியது.

இதையடுத்து, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு நீதிபதி பி.டி.ஆஷா அளித்த உத்தரவுக்கு தலைமை நீதிபதி அமர்வு தடை விதித்து தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்து. மேலும், ஜனநாயகன் பட வழக்கை ஜனவரி 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டது. இதனால், பொங்கல் பண்டிகைக்கு ஜனநாயகன் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் 'ஜனநாயகன்' பட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளது படத்தின் தயாரிப்பு நிறுவனமான KVN ப்ரொடக்‌ஷன்ஸ். ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரிய தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவை திங்கட்கிழமை அன்று அவசர வழக்காக விசாரிக்கவும் முறையிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+