Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எல். முருகன் இரண்டு துறைகளுக்கு இணையமைச்சர்.. சூப்பர் பொறுப்பு வழங்கிய பிரதமர் மோடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழக பாஜக தலைவர் எல். முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

Recommended Video

    BJP Cabinetடில் L Murugan! பின்னணி காரணம் என்ன? | OneIndia Tamil

    பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டது. 12 அமைச்சர்கள் பதவி விலகினர். இதேபோல் ஏற்கனவே பல்வேறு அமைச்சர் பதவிகளுக்கு காலியிடங்கள் இருந்தன,.

    இதனால் புதிதாக 36 அமைச்சர்கள் உள்பட 43 பேர் இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்றனர். 7 அமைச்சர்களுக்கு கேபினட் அமைச்சர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

    அதிக அமைச்சர்கள்

    அதிக அமைச்சர்கள்

    இந்த விரிவாக்க அமைச்சரவையில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்களுக்கு அதிக இடம் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் குஜராத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அதிகம் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த இருமாநிலங்களிலும் தேர்தல் வருவதால் பாஜக மேலிடம் அதிக கவனம் செலுத்தியது.

     இரண்டு துறைகள்

    இரண்டு துறைகள்

    இந்நிலையில் 43 அமைச்சர்களுக்கும் என்னென்ன பொறுப்புகள் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் தமிழகத்தைச் சேர்ந்த எல்.முருகனுக்கு மீன்வளத்துறை மற்றும் விலங்குகள் நலத்துறை & தகவல் ஒளிபரப்புத் துறையின் இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

    அமைச்சரானார்

    அமைச்சரானார்

    டெல்லிக்கு பாஜகவின் 4 எம்எல்ஏக்களை கூட்டிச்சென்று பிரதமர் மோடியிடம் ஆசிர்வாதம் வாங்க சென்ற எல் முருகன், மத்திய அமைச்சரவையில் இடம் பெற்று, மத்திய இணையமைச்சராக சென்னைக்கு வர உள்ளார். அவர் எப்போது சென்னை வருவார் என்பது தெரியவில்லை. அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் அவர் சிறிது நாட்கள் கழித்து சென்னை வருவார் என்று தெரிகிறது.

    எந்த மாநிலம்

    எந்த மாநிலம்

    இதேபோல் எல்.முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்றாலும், அவர் அடுத்த ஆறுமாதத்தில் ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட வேண்டும். அவர் எந்த மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட போகிறார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. தமிழகத்தில் வாய்ப்பு மிக குறைவு ஆகும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+