90 மணி நேர வேலை இருக்கட்டும்! உலகில் அதிகபட்ச வேலை நேரம் கொண்ட நாடுகள் எவை தெரியுமா! இந்தியா எங்கே?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மனைவியை வீட்டில் உட்கார்ந்து எத்தனை நேரம் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள்.. வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்யுங்கள் என எல் & டி நிறுவனத் தலைவர் சுப்ரமணியன் பேசியது பரபரப்பைக் கிளப்பியது. இது ஒரு பக்கம் இருக்க உலகில் இப்போது அதிகம் வேலை செய்யும் நாடுகளாக எவை உள்ளன. அதில் இந்தியா எந்த இடத்தில் இருக்கிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

நமது நாட்டில் உள்ள சில பெருநிறுவன தலைவர்கள் வேலை செய்யும் நேரத்தை அதிகரிக்க வேண்டும் எனப் பேசத் தொடங்கியுள்ளது விவாதமாகியுள்ளது. முதலில் இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தான் இதை ஆரம்பித்து வைத்தார்.

anand mahindra narayana murthy offbeat

90 மணி நேர வேலை:

அவர் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அது கடும் விமர்சனத்தைக் கிளப்பியது. இந்தச் சூழலில் அவரையே மிஞ்சும் வகையில் வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என எல் & டி நிறுவனத்தின் தலைவர் சுப்ரமணியன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்னது இணையத்தில் விவாதமானது.

வீட்டில் மனைவியின் முகத்தையே எத்தனை நேரம் தான் பார்ப்பீர்கள்.. அதற்கு ஆபீஸில் வந்து வேலை செய்யுங்கள் என்பது போல எல் & டி நிறுவனத் தலைவர் சுப்ரமணியன் கூறியிருந்தார். இதற்கு ஆனந்த் மஹிந்திரா உள்ளிட்ட பலரும் பதிலடி கொடுத்திருந்தனர். ஆனால், இந்தியாவில் ஏற்கனவே வேலை செய்யும் நேரம் அதிகமாகவே உள்ளது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் டேட்டாவில் தெரியவந்துள்ளது.

எங்கே அதிகம்:

இந்தியர்கள் இப்போது சராசரியாக ஒவ்வொரு வாரமும் 46.7 மணி நேரம் வேலை செய்கிறார்கள். அதேநேரம் 51% தொழிலாளர்கள் ஒவ்வொரு வாரமும் 49 மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் வேலை செய்வதாகச் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் அதிகம் வேலை செய்யும் நாடுகள் லிஸ்டில் நாம் 13வது இடத்தில் இருக்கிறோம். இதில் டாப் 10 இடங்களில் எந்தெந்த நாடுகள் உள்ளன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.

குறைந்த மக்கள்தொகையைக் கொண்டிருந்தாலும் தெற்கு ஆசிய நாடான பூட்டானில் உள்ள மக்கள் தான் உலகிலேயே அதிகபட்ச நேரம் வேலை செய்கிறார்கள். அங்குள்ள மக்கள் சராசரியாக வாரத்திற்கு சுமார் 54.4 மணி நேரம் வரை வேலை செய்கிறார்கள். பூட்டானுக்கு அடுத்து இந்த லிஸ்டில் ஐக்கிய அமீரகம் உள்ளது. இந்தியர்கள் உட்படப் புலம்பெயர்ந்தவர்களை அதிகம் கொண்ட ஐக்கிய அமீரகத்தில் உள்ள தொழிலாளர்கள் வாரத்திற்கு 50.9 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

ஆப்பிரிக்க நாடுகள்:

இதில் அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்க நாடான லெசோதோ இருக்கிறது. அங்குள்ள மக்கள் ஒவ்வொரு வாரமும் 50.4 மணிநேரம் வேலை செய்கிறார்கள். உலகில் அதிக நேரம் வேலை செய்யும் நாடுகளில் லெசோதோ 3வது இடத்தை பிடித்து இருக்கிறது. அதைத் தொடர்ந்து நான்காவது இடத்தில் வாரத்திற்கு 48.6 மணிநேரம் வேலை நேரத்துடன் மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

அதேபோல மற்றொரு மத்திய கிழக்கு நாடான கத்தார் வாரத்தில் சராசரியாக 48 மணிநேரம் வேலை நேரத்துடன் 5வது இடத்தில் இருக்கிறது. இங்கும் கூட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மக்கள் தொகையே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆறாவது இடத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியா உள்ளது. அங்குள்ள மக்கள் சராசரியாக வாரத்திற்கு 47.7 மணிநேரம் வேலை செய்கிறார்கள். இந்த பட்டியலில் அடுத்தது மத்திய ஆப்பிரிக்க நாடான மொரிட்டானியா உள்ளது. அங்குள்ள மக்கள் வாரத்திற்கு 47.6 மணிநேரம் வேலை செய்கிறார்கள்.

எட்டாவது இடத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் உள்ளது. அங்குள்ள மக்கள் சராசரியாக வாரத்திற்கு 47.6 மணிநேரம் வேலை செய்கிறார்கள். அடுத்து 9ம் இடத்தில் கிழக்கு ஆசிய நாடான மங்கோலியா உள்ளது. அங்குள்ள ஊழியர்கள் வாரத்திற்கு 47.3 மணிநேரம் வேலை செய்கிறார்கள். 10வது இடத்தில் மற்றொரு மத்திய கிழக்கு நாடான ஜோர்டான் உள்ளது. அங்குள்ள மக்கள் சராசரியாக வாரத்திற்கு 47 மணிநேரம் வேலை செய்கிறோம்.

அமெரிக்கா, ஐரோப்பாவில் வேலை செய்யும் நேரம் குறைவு:

அதாவது அதிக நேரம் வேலை செய்யும் டாப் 10 நாடுகளில் ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளில் இருந்து அதிகபட்சமாக தலா 4 நாடுகள் உள்ளன. ஆசியாவில் இருந்து 2 நாடுகள் உள்ளன. அதேநேரம் இந்த லிஸ்டில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட மேற்குலக நாடுகள் எதுவுமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+