1990களில் நேரடியாக 'அம்மா' பற்றி அப்படி பேசிய அத்வானி.. ஆவேசமாக பதிலடி தந்த லாலு.. திடுக் தகவல்கள்!
டெல்லி: 1990களில் பாபர் மசூதி இடிப்புக்காக பாஜக நிறுவனர்களில் ஒருவரான அத்வானி ரதயாத்திரை நடத்திய போது அதை தடுக்க முயன்ற போது தம்மிடம் எப்படி ஆவேசமாக பேசினார் என்பதை பகிரங்கப்படுத்தி இருக்கிறார் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ்.
1990-களில் விபி சிங் பிரதமராக இருந்த போது பாஜக, அந்த ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு வந்தது. அப்போது உ.பி. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கும் நோக்கத்துடன் அத்வானி நாடு தழுவிய ரத யாத்திரை நடத்தினார். இதனால் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது.

இந்த ரதயாத்திரையை தடுத்து நிறுத்த தாம் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றி பிபிசி-க்கு அளித்த பேட்டியில் லாலு பிரசாத் யாதவ் விவரித்துள்ளார். இது குறித்து லாலு பிரசாத் யாதவ் கூறியதாவது: பீகார் மாநிலத்தின் முதல்வராக இருந்த போது என் கடமையை செய்து நாட்டுக்கும் பீகாருக்குல் நல்ல செய்தியை தர விரும்பினேன். அது என்னுடைய பொறுப்பு. வன்முறைகளை என்னால் பொறுத்து கொள்ள முடியாது.
இதனால் அத்வானியின் ரதயாத்திரையை தடுத்து நிறுத்த டெல்லி சென்றேன். டெல்லியில் அத்வானியை சந்தித்து பேசினார். நான் சந்தித்த போது அத்வானி ஆவேசமாக பேசினார்.
அப்போது, அம்மாவிடம் தாய்ப்பால் குடித்த மகனால் என் ரதத்தை தடுத்து நிறுத்த தைரியம் இருக்கிறதா? என கேள்வி கேட்டார் அத்வானி. அதற்கு, நீங்க தாய்ப் பால் குடித்தீர்களா? பவுடர் பால் குடித்தீர்களா? என தெரியாது. ஆனால் எருமைப்பால் குடித்து வளர்ந்தவன்.. உங்களை விட்டுவிடமாட்டேன் என எச்சரித்தேன். இதனைத் தொடர்ந்து அத்வானியை சமஸ்திபூரில் கைது செய்தோம். இதனால் அப்போதை விபி சிங் அரசு கவிழ்க்கப்பட்டது. அதாவது அத்வானியை கைது செய்ததால் விபி சிங் அரசுக்கான ஆதரவை பாஜக வாபஸ் பெற்றது. பாபர் மசூதியை அப்போது காப்பாற்றுவதற்காக நாங்கள் இந்த முயற்சியை எடுத்தோம்.
லாலு பிரசாத் யாதவ்- நளின் வர்மா இணைந்து 'கோபால்கஞ்ச் டு ரைசினா' என்ற புத்தகம் எழுதி உள்ளார். இது தொடர்பான பிபிசி பேட்டியில் இந்த தகவல்கள் பகிரப்பட்டுள்ளன.
-
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications