செருப்பு கூட போட விடலை.. இழுத்து சென்றனர்.. அடாவடி போலீஸ்.. உபி மாணவியின் பெற்றோர் குமுறல்

சட்டக்கல்லூரி மாணவிக்கு 14 நாள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    Chinmayanand Case | அதிர வைக்கும் சின்மயானந்தா மறுபக்கம்-வீடியோ

    டெல்லி: "செருப்பு போடகூட விடலீங்க.. அப்படி இழுத்துட்டு போறாங்க.. போலீஸ்காரங்க முரட்டுத்தனமா நடந்துக்கிட்டாங்க" என்று சின்மயானந்தா மீது புகார் சொன்ன மாணவியின் குடும்பத்தினர் ஆவேசமாக தெரிவித்துள்ளனர்.

    பாஜக தலைவரும் மத்திய முன்னாள் இணை அமைச்சருமான சின்மயானந்தா, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததுடன், ஒரு வருடமாக உடல்ரீதியாக துன்றுபுறுத்தினார் என்று சட்டக்கல்லூரி மாணவி பகிரங்கமாக செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

    மாணவியும், அவரது தந்தையும் கொடுத்த வீடியோ அடிப்படையில் சாமியார் சின்மயானந்தாவை சிறப்பு பாதுகாப்பு குழுவினர் கைது செய்தனர். ஆனால் அவருக்கு உடம்பு சரியில்லாததால், இப்போது ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

    குற்றச்சாட்டு

    குற்றச்சாட்டு

    இதனிடையே சாமியார் தன்னை எப்படியெல்லாம் பாலியல் தொல்லை தந்தார் என்று மாணவி தந்த வாக்குமூல செய்தி மீடியாக்களில் நேற்று வெளியாக தொடங்கியது. ஆனால் இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், பாலியல் குற்றச்சாட்டை சொன்ன மாணவி மீது பணப்பறிப்பு புகார் தொடுக்கப்பட்டுள்ளது.

    மனு தாக்கல்

    மனு தாக்கல்

    அதாவது, பாலியல் புகார் தொடர்பான வீடியோ ஆதாரங்களை அழிக்க வேண்டும் என்றால், 5 கோடி ரூபாய் கேட்டு மாணவி மிரட்டியதாகவும் அதன்பேரிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. இதில், முன்ஜாமீன் கேட்டு மாணவி ஷாஜன்பூர் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார். அந்த மனு விசாரணைக்கு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டநிலையில், நாளை விசாரணைக்கு வர போகிறது.

    14 நாள் சிறை

    14 நாள் சிறை

    இந்த நிலையில் சாமியார் மீது பாலியல் புகார் கூறிய சட்டக்கல்லூரி மாணவி இன்று காலை சிறப்பு புலனாய்வு குழுவினரால், பணப்பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், ஷாஜகான்பூர் கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட் வினித்குமார் முன்னிலைலையில் மாணவி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுதது, அவரை 14 நாள் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

    ஆவேசம்

    ஆவேசம்

    ஆனால், மாணவியை போலீசார் வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர் என்று அவரது குடும்பத்தினர் கொதித்து போய் சொல்கிறார்கள். "அப்படி இழுத்துட்டு போறாங்க.. செருப்பு போடகூட விடலை.. கைது செய்யும்போது போலீசார் முரட்டுத்தனமாக நடந்துக்கிட்டாங்க" என்கின்றனர் ஆவேசமாக!

    முன்னதாக கோர்ட்டில் ஆஜராகவும் மாணவியை போலீசார் அனுமதிக்கவில்லை என தெரிகிறது. செய்தியாளர்கள் வந்த பின்னரே, மாணவியை கோர்ட்டில் ஆஜராக அனுமதித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+