டெல்லி ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் ரிசல்ட்: மொத்தமாக தட்டித் தூக்கிய இடதுசாரிகள்.. ABVP அவுட்!
டெல்லி: ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில் இடதுசாரிகள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். மாணவர் சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் இணைச் செயலாளர் ஆகிய நான்கு முக்கிய பதவிகளையும் இடதுசாரி ஒற்றுமை அணி வென்றுள்ளது. ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ABVP தோல்வியடைந்துள்ளது.
2025-2026 ஆம் ஆண்டுக்கான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் (ஜேஎன்யுஎஸ்யு) தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி காலையில் தொடங்கி மாலையில் நிறைவடைந்தது. செல்லுபடியாகும் வேட்பு மனுக்களின் பட்டியல் அடுத்த நாள் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான காலம் நிறைவடைந்து வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாணவர்களிடம், வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நிலையில், ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தல் நவம்பர் 4 ஆம் தேதி நடைபெற்றது. இடதுசாரி ஒற்றுமை அணி, ஆர்.எஸ்.எஸ்ஸின் மாணவர் அமைப்பான ABVP, காங்கிரஸின் மாணவர் அமைப்பான NSUI ஆகியவை களத்தில் இருந்தன. இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நவம்பர் 6 ஆம் தேதியான இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி ஒற்றுமை அணியைச் சேர்ந்த அதிதி மிஸ்ரா, ஜேஎன்யுஎஸ்யு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதிதி மிஸ்ரா, ஏபிவிபியின் விகாஸ் படேலை 414 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அதிதி 1,861 வாக்குகளையும், விகாஸ் 1,447 வாக்குகளையும் பெற்றனர்.
இடதுசாரி ஒற்றுமை என்பது இந்திய மாணவர் கூட்டமைப்பு, அகில இந்திய மாணவர் சங்கம் மற்றும் ஜனநாயக மாணவர் கூட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய இடதுசாரிக் கட்சிகளின் கூட்டணியாகும். இதில் அதிதி AISA அமைப்பைச் சேர்ந்தவர்.
இடதுசாரி ஒற்றுமை கூட்டணியைச் சேர்ந்த கிழக்கூட் கோபிகா பாபு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார், அவர் 2,966 வாக்குகள் பெற்று துணைத் தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். ABVPயின் தன்யா குமாரியை 1,236 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு மிகக் கடுமையான போட்டி நிலவியது, இடதுசாரி ஒற்றுமை அணியின் சுனில் யாதவ் 1,915 வாக்குகளைப் பெற்று, ஏபிவிபியின் ராஜேஷ்வர் காந்த் துபேயை 74 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
ஜேன்யு மாணவர் சங்க இணைச் செயலாளர் பதவிக்கு இடதுசாரி ஒற்றுமை அணியின் டேனிஷ் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் 1,991 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார், ABVPயின் அனுஜ் டமாரா 1,762 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
2024-2025 ஆம் ஆண்டுக்கான ஜேஎன்யு மாணவர் சங்கத் தேர்தலில், இடதுசாரி ஆதரவு குழுக்கள் நான்கு மத்திய குழு பதவிகளில் மூன்றை வென்றன. அதே நேரத்தில் இணைச் செயலாளர் பதவியை ஏபிவிபி வென்றது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications