பஹல்காம் தாக்குதலை நாங்கள் செய்யவில்லை! இந்தியாவின் பதிலடிக்கு பயந்து லஷ்கர் தலைவன் கண்ணீர் வீடியோ
டெல்லி: பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் இந்தியா நாடகம் ஆடுகிறது என்றும் காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும் லஷ்கர் இ தொய்பா துணைத் தலைவன் சைஃபுல்லா கசூரி (என்கிற) சைஃபுல்லா காலித் கண்ணீர் மல்க மறுத்துள்ளான்.

கோடை விடுமுறையையொட்டி காஷ்மீரின் குட்டி சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் பஹல்காமுக்கு பலர் சுற்றுலா சென்றனர். அங்கும் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த தீவிரவாதிகள் அவர்களை துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் இந்தியாவை சேர்ந்த 25 பேரும் நேபாளத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகிவிட்டனர். மேலும் சிலர் காயமடைந்தனர். அவர்கள் டெல்லிக்கு கொண்டு வரப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சயீத்தின் லஷ்கர் இ-தொய்பா இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன் ஃப்ரண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. மேலும் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டவர் சைஃபுல்லா கசூரி என சொல்லப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு உலகத் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் வாகா எல்லை இந்தியாவால் மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் வெளியேற உத்தரவு, சிந்து நதி நீர் நிறுத்தம் உள்ளிட்ட 5 நடவடிக்கைகளை இந்திய எடுத்துள்ளது.
இதில் சிந்து நதி நீர் நிறுத்தப்படுவதால் பாகிஸ்தானில் தண்ணீர் தட்டுப்பாடு எழும் அபாயமும் , நீர் மின் நிலையங்களில் மின்சாரத்தை தயாரிக்க முடியாததால் மின்சார பற்றாக்குறையும் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் பீகாரில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பஹல்காம் சம்பவத்தில் தொடர்புடையவர்கள், மூளையாக செயல்பட்டவர்கள், பின்புலத்தில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் ஒவ்வொரு பயங்கரவாதிகளையும் கண்டுபிடித்து தண்டனை வழங்குவோம்.
பயங்கரவாதிகளுக்கு கற்பனைக்கு எட்டாத தண்டனை வழங்கப்படும். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை பயங்கரவாதத்துக்கு பயன்படுத்துவது ஒழிக்கப்படும் என மோடி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் லஷ்கர் இ தொய்பாவின் துணை தலைவன் சைஃபுல்லா கசூரி என்பவர் கண்ணீர் மல்க ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: காஷ்மீர் தாக்குதலில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை. பாகிஸ்தானில் அமைதியை குலைக்க யாரோ முயற்சி செய்கிறார்கள்.
உலக நாடுகள் இந்தியாவை கண்மூடித்தனமாக ஆதரிக்க வேண்டாம். உண்மைக்கு துணையாக இருங்கள். இந்தியா நாடகம் ஆடுகிறது. இந்த தாக்குதலை அவர்களே செய்தார்கள். பஹல்காம் தாக்குதலில் அவர்களை தவிர யாரும் இல்லை. இந்த தாக்குதலில் பாகிஸ்தானுக்கோ எந்த அமைப்புகளுக்கோ சம்பந்தமில்லை என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளான்.
இவரது வீடியோ வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கூறுகையில் திவிவேதியை அவருடைய மனைவியின் முன்பு எப்படி கொன்றீர்களோ அதே போல் உன் நெற்றியிலும் இந்தியா புல்லட்டை வைக்கும். இந்தியா கண்டிப்பாக தாக்குதலுக்கு பழிவாங்கியே தீரும்.
இந்தியாவிடம் நாம் கிடைத்தால் எப்படியும் எந்த தயவு தாட்சன்யம் இல்லாமல் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்துவிடும் என கசூரிக்கு தெரியவந்ததால்தான் நீலிக் கண்ணீர் வடிக்கிறான் என நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications