முதலில் சிபிஐ அவர்கள் வீட்டை சரிபடுத்தட்டும்.. ரஃபேல் வழக்கில் குட்டு வைத்த உச்ச நீதிமன்றம்
Recommended Video

டெல்லி: ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வலியுறுத்திய பொது நல வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், முதலில் சிபிஐ தனது வீட்டை சரியாக வைத்துக்கொள்ளட்டும் என கூறி குட்டு வைத்துள்ளது.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர்கள் யஷ்வந்த் சின்ஹா, அருண்ஷோரி ஆகியோரும் சமூக செயல்பாட்டாளரும், வழக்கறிஞருமான, பிரசாந்த் பூஷன் தொடர்ந்த வழக்கும் இணைக்கப்பட்டு இன்று விசாரணை நடத்தியது உச்ச நீதிமன்றம்.

இன்று மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், யு.யு.லலித், கே.எம்.ஜோசப் அடங்கிய அமர்வு, ரஃபேல் ஒப்பந்தத்திற்கான நடைமுறை மற்றும் விலை விவரத்தை சீலிட்ட கவரில் வைத்து சுப்ரீம் கோர்ட்டில், இன்னும் 10 நாட்களுக்குள் மத்திய அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
விசாரணையியன்போது வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் வாதிடுகையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், "அதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும். முதலில் சிபிஐ அதன் வீட்டை ஒழுங்குபடுத்தட்டும்" என்று பதிலளித்தார்.
சிபிஐ இயக்குநர் மற்றும் சிறப்பு இயக்குநர் நடுவே மோதல் ஏற்பட்டு அந்த வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் நீதிபதி இவ்வாறு கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications