ஆரம்பம் நல்லாதான் இருக்கு.. பாஜக கூட்டணிக்குள் இவ்வளவு பிரச்சனையா? தலைசுத்துதே - அப்போ பினிஷிங்
டெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்ற நிலையில், அந்த கூட்டணி 2024 தேர்தல் வரை தொடர்வதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய கூட்டத்தில் 38 கட்சிகள் கலந்துகொள்ளும் என பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா அறிவித்து உள்ள நிலையில், இதில் உள்ள அனைத்து கட்சிகளும் கடைசி வரை பாஜகவுடன் தொடர்வதில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. குறிப்பாக பீகார், மகாராஷ்டிரா மாநிலங்களில் தொகுதி பங்கீடு மிகப்பெரிய சிக்கலாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.

பீகார்: கடந்த 2019 தேர்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தியுடன் கூட்டணி அமைத்து பாஜக போட்டியிட்டது. இதில் பாஜக மற்றும் ஜேடியு தலா 17 இடங்களிலும், எல்ஜேபி 6 இடங்களிலும் போட்டியிட்டன. இதில் 40ல் 39 இடங்களில் பாஜக கூட்டணி வென்றது. ஆனால், இப்போது ஜேடியு காங்கிரஸ், ஆர்ஜேடி கூட்டணியில் உள்ளது.
பாஸ்வான் மறைவுக்கு பிறகு எல்ஜேபியும் உடைந்து உள்ளது. உடைந்த இரு பிரிவினரையும் சேர்க்க வேண்டிய பொறுப்பு பாஜகவுக்கு உள்ளது. சிராக் பாஸ்வான் கடந்த தேர்தலை போன்றே தொகுதி பங்கீடு கேட்கிறது. ஆனால், அவரது சித்தப்பா பசுபதி பாரஸ் சிராகுடன் இணைய விரும்பவில்லை. அதே நேரம் ஜிதன் ராம் மஜ்ஜி, உபேந்திர குஷ்வாஹா கட்சிகளும் அதிக தொகுதிகளை எதிர்பார்ப்பதால் அங்கு சவால் காத்திருக்கிறது.
மகாராஷ்டிரா: 2019 தேர்தலில் பாஜக - சிவசேனா ஒரே கூட்டணியில் இருந்தது. ஆனால், இன்றோ பாஜக தலையீட்டால் சிவசேனா இரண்டாக உடைந்து ஏக்நாத் ஷிண்டே தரப்பு கூட்டணியில் தொடர்கிறது. உத்தவ் தாக்கரே தரப்பு எதிர்க்கட்சி கூட்டணியில் உள்ளது. மறுபக்கம் அண்மையில் பிளவுபட்ட என்சிபியிலும் அஜித் பவார் தரப்பு பாஜக கூட்டணியில் உள்ளது. பிளவுபட்ட இரு கட்சிகளும் மகாராஷ்டிராவில் முக்கிய கட்சிகள் என்பதால் 48 தொகுதிகளை சமமாக பிரித்துக் கொடுப்பதில் பாஜகவுக்கு சிக்கல் தொடர்கிறது.
உத்தரப்பிரதேசம்: 2019 தேர்தலில் அப்னா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போது பாரதிய சமாஜ் கட்சி மற்றும் நிஷாத் கட்சிகளும் பாஜக கூட்டணியில் உள்ளன. ஆர்.எல்.டி கட்சியோடு பாஜக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், கடந்த முறை பாஜக தான் போட்டியிட்ட தொகுதிகளை குறைத்துக்கொண்டு இத்தனை கட்சிகளும் தொகுதிகளை பங்கிட்டு கொடுக்குமா என்ற கேள்வி எழுகிறது? அவ்வாறு செய்தால் பாஜகவிற்கு உள்ளேயே கருத்து வேறுபாடு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
தமிழ்நாடு: இம்முறை பாஜக அதிகம் குறிவைக்கும் மாநிலம் தமிழ்நாடுதான். அதில் பிரதான கூட்டணி கட்சியான அதிமுகவிற்குள் நிலவிய உட்கட்சி மோதல் ஓரளவு முடிவுக்கு வந்து கட்சி எடப்பாடிக்கு என்றாகிவிட்டது. இதை தவிர பாமக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பாஜக கூட்டணியில் உள்ளன. ஆனால், பாமக பாஜக கூட்டணி குறித்து முடிவை அறிவிக்கவில்லை. அதிமுக பாஜக இடையிலும் தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து வருகின்றன. தொகுதி பங்கீடு சமயத்தில் இந்த மோதல் பெரிதாகும் என்றும் கூறப்படுகிறது.
அரியானா: அரியானாவில் துஷ்யந்த் சௌதாலாவின் ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து பாஜக ஆட்சி செய்து வருகிறது. இம்முறை அம்மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் பாஜகவே போட்டியிடும் என அக்கட்சி பிடிவாதமாக இருப்பதால் கூட்டணியில் பிளவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. 2024 தேர்தலுக்கு முன்பே இவர்களின் கூட்டணி உடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி












Click it and Unblock the Notifications