கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போல வாய்ப்பை பயன்படுத்துவோம்.. பாஜக எம்.பிக்களிடம் சொன்ன பிரதமர் மோடி
டெல்லி: எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ள நிலையில், பாஜகவின் பாராளுமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் எம்.பிக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியதில் இருந்தே கடும் அமளி ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையே, மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. இன்றைய விவாதத்தை மக்களவையில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து பேசுவார் என்று தெரிகிறது.

அதேபோல், காங்கிரஸ் தரப்பில் மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றவுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக சார்பில் நிஷாந்த் துபே விவாதத்தின் முதல் நபராக பேசுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நடைபெற உள்ள நிலையில், பாஜக பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக எம்.பிக்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அப்போது பிரதமர் மோடி பேசுகையில் கடைசி பந்தில் சிக்சர் அடிப்பது போல எதிர்க்கட்சிகளுக்கு எதிரானதாக நம்பிக்கை இல்லா தீர்மான வாய்ப்பை பயன்படுத்துவோம் என்று கூறியதாக பாஜக வட்டாரங்கள் கூறுகின்றன.
-
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
பாத்து பண்ணி விடுங்க.. ராஜ்யசபா சீட்டுக்கு அடி போடும் காங்.,? விஜய்யிடம் நேரில் பேசிய ப.சிதம்பரம்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications