தன் பாலின உறவு ஓகே.. சட்டப்பூர்வ திருமண அங்கீகாரம்தான் இல்லை- சுப்ரீம் கோர்ட் சொல்வது இப்படித்தான்!
டெல்லி: தன் பாலின உறவு உள்ள தம்பதிகளுக்கு மாற்று பாலின தம்பதிகளுக்கான அனைத்து உரிமைகளும் உள்ளது; சட்டப்பூர்வமான திருமண அங்கீகாரம்தான் இல்லை என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளதாக மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கீதா லுத்ரா தெரிவித்துள்ளார்.
தன் பாலின திருமணத்துக்கு (ஓரின சேர்க்கையாளர்கள் திருமணம்) சட்டப்பூர்வ அங்கீகாரம் கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடித் தீர்ப்பை வழங்கியது. உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் 3:2 என்ற அடிப்படையில் வேறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனடிப்படையில் தன்பாலின திருமணத்துக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது; இது தொடர்பாக ஆராய மத்திய அரசு குழு ஒன்றை அமைக்கலாம்; இத்தகைய திருமண சீர்திருத்தங்கள் சட்டங்கள் மூலம் மேற்கொள்ள முடியும்; சட்டங்களை நாடாளுமன்றம்தான் நிறைவேற்ற முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தத்தெடுப்பு உரிமை: மேலும் தலைமை நீதிபதி சந்திரசூட், எஸ்.கே. கவுல் ஆகியோர், தன் பாலின தம்பதிகள் தத்தெடுத்துக் கொள்ளலாம் என தீர்ப்பில் குறிப்பிட்டனர். ஆனால் நீதிபதிகள் ரவீந்தர பட், ஹிமா கோலி, நரசிம்மா ஆகியோர் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.
மத்திய மாநில அரசுகளுக்கு அறிவுரை: அத்துடன் தன் பாலின உறவில் உள்ளவர்களுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் பாகுபாடு காட்டக் கூடாது; இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த தன் பாலின உறவாளர்களுக்கு பாதுகாப்பு விடுதிகள் அமைக்கலாம் எனவும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழப்பமான தீர்ப்புதானா?: அதாவது உச்சநீதிமன்றமானது, தன் பாலின உறவு திருமணங்களுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் வழங்க முடியாது என தீர்ப்பளித்துள்ள; அதேநேரத்தில் தன் பாலின உறவாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை கண்டித்துள்ளது. தன் பாலின உறவாளர்களுக்கு இது சாதகமான அம்சமாகவும் பார்க்கப்படுகிறது. பொதுவில் தன்பாலின உறவுக்கு எதிராக இல்லாமல், தன் பாலின உறவுக்கான திருமண அங்கீகாரத்தை மட்டும் நிராகரித்துள்ளது உச்சநீதிமன்றம்.
தலைமை நீதிபதி கருத்து: இத்தீர்ப்பு குறித்து மனுதாரர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கீதா லுத்ரா கூறியதாவது: தன் பாலினத்தவர் திருமணத்துக்கு உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமான அங்கீகாரம் தரவில்லை. ஆனால் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், மாற்றுப் பாலின திருமணம்- நடைமுறையில் உள்ள திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளுக்கான அனைத்து உரிமைகளும் தன் பாலின திருமண தம்பதிகளுக்கு உள்ளது என தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
போராட்டம் தொடரும்: தன் பாலின திருமண அங்கீகாரம் கோரிய மனுதார்களில் ஒருவரான செயற்பாட்டாளர் ஹரீஷ் ஐயர் கூறுகையில், இவ்வழக்கின் இறுதித் தீர்ப்பு எங்களுக்கு சாதகமானதாக இல்லைதான். ஆனால் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள பல கருத்துகள் எங்களுக்கு சாதகமாக உள்ளன. எங்களுக்கு எதிராக மத்திய அரசு, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் கருத்துகள் தெரிவித்திருந்தனர். தற்போது அரசு, எம்பி, எம்.எல்.ஏக்களிடம் எங்களது நிலைப்பாட்டை நாங்கள் தெரிவிக்க வேண்டியது உள்ளது. எங்களுடைய போராட்டம் தொடருகிறது. சமூகத்தில் சம அந்தஸ்தை நாங்கள் பெறுவதற்கு சில காலம் ஆகும் என்றார்.
எங்களுக்கும் உரிமை உண்டு: மற்றொரு மனுதாரரும் மூத்த வழக்கறிஞருமான அஞ்சலி கோபாலன் கூறுகையில், நாங்கள் நீண்டகாலமாக போராட்டத்தை நடத்தி வருகிறோம். தன் பாலினத்தவர் தத்தெடுப்புக்கு ஆதரவாக தலைமை நீதிபதி கருத்து தெரிவித்தார். ஆனால் இதர நீதிபதிகள் இதனை ஏற்கவில்லை. இது ஜனநாயக நாடு. சொந்த நாட்டின் குடிமக்களுக்கு உரிய உரிமைகள் மறுக்கப்படுகிறது என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications