Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"உருண்ட தலைகள்.. சிதைந்த உடல்கள்.. தண்டவாளம் முழுக்க ரத்தம்".. நடுங்கவிட்ட விபத்துக்களம்.. அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: "எங்கேயும் கைகால்கள் இல்லாத சிதைந்த உடல்கள் சிதறிக்கிடந்தன... ரெயில் தண்டவாளங்கள் முழுக்க ரத்தக்களமாக காட்சியளித்தன" என்று ரயில் விபத்தில் தப்பிய பயணி ஒருவர், தன் அனுபவங்களை பதிவிட்டுள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே நேற்று இரவு 3 ரெயில்கள் விபத்துக்குள்ளானது. இதில், இதுவரை 280-க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

900க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்... விடிய விடிய மீட்புப் பணிகள் நடந்தநிலையில், தற்போதும் நீடித்து வருகிறது..

limbless bodies bloodbath on tracks survivor expresses odisha train crash and tweeted about it

விபத்துக்கு குடியரசுத் தலைவர், பிரதமர், மாநில முதல்வர்கள் உள்ளிட்ட முன்னணி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். ரயில்வே முதலமைச்சர் அஸ்வினி வைஷ்னவ், ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் இன்று அதிகாலை விபத்து நடந்த இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.

உதயநிதி: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஒடிசா முதல்வரை தொடர்பு கொண்டு பேசிய நிலையில், மாநில அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சிவசங்கர் ஆகியோர் ஒடிசா விரைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர்.

நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், இப்போது வரை 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் மாநில தலைமை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்ல, விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர். இரவு நேரத்தில் மீட்பு பணி என்பது மிகவும் சவாலாக இருந்தது.
புவனேஷ்வர் : ஒடிசா ரயில்விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது வரை 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் மாநில தலைமை செயலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக, பாலாசோரில் ரத்த தானம் செய்ய மக்கள் குவிந்து வருகின்றனர். நேற்று ஒரே இரவில் 500 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டதாகவும், தற்போது வரை 900 யூனிட் ரத்தம் கையிருப்பில் இருப்பதாகவும் மாநில தலைமை செயலாளர் தகவல் சுமார் 200க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மீட்பு பணிக்காக களமிறக்கப்பட்டுள்ளது. படுகாயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து செய்தி அறிந்ததும் உள்ளூர் மக்கள் பலரும் மருத்துவமனைக்கு விரைந்து நீண்ட வரிசையில் நின்று ரத்த தானம் செய்தனர்.தெரிவித்துள்ளார்.

விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், ஒடிசா மாநிலத்துக்கான அவசரகால பேரிடர் விரைவு படை, தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஒடிசா தீயணைப்புத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 3 ரெயில்கள் விபத்து என்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
பயங்கர சத்தம்: இந்நிலையில், ஒடிசா விபத்தில் சிக்கி, உயிர் தப்பிய பயணிகள் தங்கள் அனுபவங்களை சொல்லி வருகிறார்கள்.. டம் டம் என்று பயங்கர சத்தம் கேட்டதாகவும், கண்ணிமைக்கு நேரத்திலேயே எல்லாமே நடந்து முடிந்துவிட்டதாகவும் அதிர்ச்சி விலகாமல் சொல்கிறார்கள்.. பெட்டிகள் நொறுங்கிய நிலையில், பயணிகளும் அதில் சிக்கி உயிரிழந்ததாகவும், கண்ணெதிரே அவர்களின் சடலங்கள் உருக்குலைந்து கிடந்ததாகவும் கலங்கி சொல்கிறார்கள்.

limbless bodies bloodbath on tracks survivor expresses odisha train crash and tweeted about it

அந்தவகையில், அனுபவ தாஸ் என்பவர், தான் எதிர்கொண்ட சம்பவத்தை, ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.. அந்த பதிவில், "ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சாயங்காலம், ஷாலிமார்- சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டுவிட்டது.. அத்துடன், அருகிலிருந்த லூப் டிராக்கில் நின்று கொண்டிருந்த சரக்கு ரெயிலின் மீது பலமாக மோதியது.

ரயில் பயணம்: பிறகு, பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதியது. ஹவுராவில் இருந்து சென்னை செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்ஸில் நான் பயணம் செய்து வந்த நிலையில், காயமின்றி தப்பித்தேன்.. இதற்காக கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன்... இது மிகப்பெரிய ரெயில் விபத்து.

பெங்களூரு-ஹவுரா சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸின் 3 பெட்டிகள் முற்றிலும் தடம் புரண்டு சேதமடைந்துள்ளன. கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயிலின் ஜெனரல், ஸ்லீப்பர், ஏசி 3 அடுக்கு மற்றும் ஏசி 2 அடுக்கு என சுமார் 13 பெட்டிகள் மொத்தவே சேதமடைந்துவிட்டன.. விபத்தில் சிக்கி குடும்பங்கள் சுக்குநூறாக நொறுங்கின. கைகால்கள் இல்லாமலும், சிதைந்த நிலையிலும் உடல்களும் சிதறிக்கிடந்தன..

தண்டவாளம்: ரெயில் தண்டவாளங்கள் முழுவதுமே ரத்தக்களமாக காட்சியளித்தன. இது என்னால் மறக்கவே முடியாத ஒரு காட்சி. விபத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு கடவுள் உதவுவார்... அவர்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+