திறப்பு விழாவுக்கு தயாரான புதிய நாடாளுமன்றம்.. பங்கேற்கும் & புறக்கணிக்கும் கட்சிகள்.. முழு லிஸ்ட்!
டெல்லி : இந்தியாவின் புதிய நாடாளுமன்றத்தின் கட்டிடம் தயாராக உள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இந்த விழாவில் எந்தெந்த கட்சிகள் பங்கேற்கின்றன மற்றும் எந்தெந்த கட்சிகள் புறக்கணிக்கின்றன என்பதை இங்கே பார்க்கலாம்.
டெல்லியில் தற்போதைய நாடாளுமன்ற வளாகத்தில் இரு அவைகளிலும் எம்.பி.க்கள் செயல்படுவதற்கு கடுமையான இட பற்றாக்குறை நிலவுகிறது. மேலும் இந்த நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நெருங்கும் நிலையில் அதில் புதிய நவீன வசதிகள் எதையும் செய்யமுடியாத நிலை காணப்பட்டது. இதனால் நாடாளுமன்ற கட்டிடம் அருகிலேயே புதிய நாடாளுளுமன்றம் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டது.

அந்த இடத்தில் கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கட்டுமான பணிகள் தொடங்கின. 64 ஆயிரத்து 500 சதுர அடி பரப்பளவில் புதிய பாராளுமன்றம் கட்டப்பட்டுள்ளது. 4 அடுக்கு மாடிகளை கொண்ட புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் மக்களவை , மாநிலங்களவை கூடுவதற்காக தனித்தனி அரங்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 2 மிகப்பெரிய ஆலோசனை கூடங்களும் கட்டப்பட்டுள்ளன. மக்களவையில் 888 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்களும் அமரும் வகையில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இன்று சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பது ஏற்புடையது அல்ல என்று எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்பின. மேலும் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை ஜனாதிபதி திறக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் இதை மத்திய அரசு ஏற்கவில்லை.
இதையடுத்து புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவை எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. எனினும், புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்பதாக அறிவித்துள்ளன.
புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்கும் கட்சிகள்:
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள் : பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசிய மக்கள் கட்சி, மேகாலயா, தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி, சிக்கிம் புரட்சிகர முன்னணி, ஜனநாயக கட்சி, அதிமுக, ஐ.எம்.கே.எம்.கே, AJSU, RPi, மிசோ தேசிய முன்னணி, தமிழ் மாநில காங்கிரஸ், ITFT (திரிபுரா), போடோ மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி, அப்னா தளம், அசாம் கண பரிஷத்
தேசிய ஜனநாயகக் கூட்டணி அல்லாத கட்சிகள் : லோக் ஜனசக்தி கட்சி (பாஸ்வான்), பிஜேடி, பி.எஸ்.பி, டிடிபி, ஒய்.எஸ்.ஆர்.சி.பி, அகாலி தளம், ஜேடிஎஸ், தெலுங்கு தேசம், மக்கள் நீதி மய்யம்
புறக்கணிக்கும் கட்சிகள் : காங்கிரஸ்,திமுக, டிஎம்சி, ஐக்கிய ஜனதா தளம், ஆம் ஆத்மி, என்சிபி, சிவசேனா (உத்தவ் தாக்ரே), கேரளா காங்கிரஸ், புரட்சிகர சோசியலிஸ்ட், விசிக, மதிமுக, ராஷ்டிரியலோக் தளம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதாதளம், இந்திய கம்யூனிஸ்ட், ஐயுஎம்எல், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தேசிய மாநாட்டு கட்சி












Click it and Unblock the Notifications