ஜி20 மாநாடு! ஜோ பைடன் முதல் சவுதி இளவரசர் வரை! டெல்லி வந்துள்ள தலைவர்கள் யார் யார்? ஆப்சென்ட் யார்?
டெல்லி: டெல்லியில் இன்று நடைபெறும் ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்கள் யார்யார், கலந்து கொள்ளாதவர்கள் யார் யார் என்பதை பார்ப்போம்.
அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென்னாப்பிரிக்கா, சவுதி, தென்கொரியா, மெக்ஸிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன.

இந்த கூட்டமைப்பு 1999ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆண்டுதோறும் இந்த அமைப்பின் சார்பில் மாநாடு நடத்தப்பட்டு பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்படும். உறுப்பு நாடுகளின் அகரவரிசையின்படி இந்த ஆண்டு ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று நடத்துகிறது.
இந்த பொறுப்பை கடந்த நவம்பர் மாதமே இந்தியா எடுத்துக் கொண்டது. இதைத் தொடர்ந்து ஜி20 நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டம் நாடு முழுவதும் 9 மாதங்களாக நடந்தது. சென்னை உள்பட 60 நகரங்களில் 200 கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்த ஜி20 அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் பிரகதி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த மாநாடு இன்றும் மாலையும் நடைபெறுகிறது. இதனால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஜி20 அமைப்பில் உள்ள உறுப்பு நாடுகள் உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85 சதவீதத்தை பங்களிக்கின்றன. அது போல் உலக மக்கள்தொகையில் மூன்றில் இரு பங்குகளையும் கொண்டுள்ளன.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, சீனப் பிரதமர் லீ கியாங், ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், நைஜீரியா, அர்ஜென்டினா, இத்தாலி, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்ள யாரெல்லாம் இந்தியா வந்துள்ளார்கள் தெரியுமா?
நைஜீரியாவின் அதிபர் போலா அகமது தினுபு- இவரை மத்திய இணையமைச்சர் எஸ்.பி.சிங் பகேல் விமான நிலையத்தில் வரவேற்றார்.
உலக வர்த்தக நிறுவனத்தின் இயக்குநர் டாக்டர் நகோஸி ஓகோன்ஜோ ஐவியாலா வருகை தந்துள்ளார்.
சர்வதேச நிதியத்தின் நிர்வாக இயக்குநர் கிறிஸ்டாலினா ஜியோஜிவா வந்துள்ளார்.
அது போல் இத்தாலியின் பிரதமர் ஜியார்ஜியா மெலோனி, ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உருசுலா வான் டெர் லேயன், பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி நிறுவனத்தின் பொதுச் செயலாளர் மத்தியாஸ் கார்மான், மெக்சிகோ நாட்டின் அமைச்சர் ராக்வில் புவன்ரோஸ்ட்ரோ சான்செஸ், மொரீஷியஷின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத், ஐரோப்பிய கவுன்சிலின் தலைவர் சார்லஸ் மைக்கேல் உள்ளிட்டோர் வந்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று மாலை வருகை தந்தார். அவரை மத்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார். பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோணி அல்பனீஸ், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, வங்கதேச பிரதமர் ஷேர் ஹசீனா, ஐக்கிய அரபு நாடுகள் அதிபர் ஷேக் முகமது பின் சயீது அல் நய்யான் , சீன பிரதமர லி கியாங், அர்ஜென்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னான்டஸ், துருக்கி அதிபர் ரிசப் தயீப் எர்டோகன், நெதர்லாந்து பிரதமர் மார்க் ருட்டே, எகிப்து அதிபர் அப்டெல் ஃபட்டா எல் சிசி, தென் கொரியா அதிபர் யூன் சூக் இயோல் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
ஜெர்மன் தூதுவர் ஓலப் ஸ்கோல்ஸ் மட்டும் இன்று டெல்லி வருகிறார். அவரை மத்திய இணையமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா வரவேற்கிறார். ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்ஸை மத்திய இணையமைச்சர் தாகூர் வரவேற்பதாக இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் அவரது டெல்லி வருகை இறுதியில் ரத்தானது. அது போல் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கொரோனா தொற்று இருந்ததால் ஜோ பைடனின் டெல்லி வருகை சிக்கலில் இருந்தது. ஆனால் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் அவருக்கு கொரோனா இல்லை என முடிவுகள் வந்ததால் அவர் நேற்றைய தினம் டெல்லி வந்தார்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications