இன்று முதல் லாக்டவுன் 4.0 அமலுக்கு வந்தது.. பேருந்து சேவைகளுக்கு அனுமதி.. ஆனால் மாநில அரசு கையில்!
டெல்லி: நாடு முழுவதும் 4ம் கட்ட லாக்டவுன் இன்று முதல் அமலுக்கு வந்தது. கொரோனா தொற்று பரவுவதை தடுக்க பிறப்பித்த லாக்டவுனை மே 31 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதனால் மே 18ம் தேதியான இன்று தொடங்கி மே31 வரை மேலும் 14 நாட்கள் நாடு முழுவதும் லாக்டவுன் அமலில் இருக்கும்.
கொரோனா பரவுவதை தடுக்க மத்திய அரசு மார்ச் 24ம் தேதி முதல் முதலாக நாடு தழுவிய லாக்டவுனை 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை லாக்டவுன் அமலில் இருந்தது. இதனிடையே மீண்டும் மத்திய அரசு லாக்டவுனை மே 3ம் தேதி வரை நீட்டித்தது. அதன்பிறகு ஓரளவு தளர்வுகளுடன் மே 4ம் தேதி முதல் மே 17 வரை லாக்டவுன் நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
தனிக்கடைகள் இயங்க அனுமதி, தொழிற்சாலைகள் இயங்க அனுமதி, அலுவலகங்கள் இயங்க அனுமதி என பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்நிலையில் 4வது முறையாக மே 18 தொடங்கி (இன்று) மே 31 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த லாக்டவுனில் பல தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. பேருந்து சேவைகள் இயக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை மாநில அரசுகளே முடிவு எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

அனுமதிக்கப்படும் சேவைகள்
மாநிலங்கள் ஒத்துழைத்தால் மாநிலங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து மேற்கொள்ளலாம். மாநிலங்கள் ஒத்துழைத்தால் மாநிலங்களுக்கு இடையே மற்ற கார், பைக் சாதாரண போக்குவரத்து தொடர்ந்து செயல்படும். மாநிலங்களே சிவப்பு, பச்சை, ஆரஞ்ச் மண்டலங்கள் குறித்த முடிவுகளை எடுத்துக்கொள்ளலாம். ஆனால் மத்திய அரசின் வழி காட்டுதலின்படி மாநிலங்களே மண்டலங்கள் குறித்த முடிவுகளை எடுக்க முடியும். மேலே தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்ட விஷயங்களை தவிர மற்ற விஷயங்களுக்கு அனுமதி. முடிவெட்டும் கடைகளுக்கு அனுமதி, பொருட்கள் விற்கும் வணிக நிறுவனங்களுக்கு அனுமதிக்கலாம்.

தடை செய்யப்பட்ட சேவைகள்
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமான போக்குவரத்திற்காக தடை நாடு முழுக்க தொடரும். சிறப்பு ரயில் தவிர மற்ற ரயில் இயங்காது. இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை மக்கள் நடமாட்டத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் வீட்டிலேயே தங்கி இருக்க வேண்டும். கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு செய்ய வேண்டும். வீட்டுக்கு வீடு ஆய்வு நடத்த வேண்டும்.

தியேட்டர்கள் செயல்பட தடை
மெட்ரோ ரயில்கள் எப்போதும் போல இயங்காது. தங்கும் ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள் செயல்படாது. ஹோட்டல்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. மால்கள், ஜிம்கள், பார்க், தியேட்டர்கள் எப்போதும் போல செயல்படாது. பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் இயங்காது. திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களில் சமூக இடைவெளி அவசியம் - 50 நபர்களுக்கு மேல் கூட தடை மரணம் உள்ளிட்ட துக்க நிகழ்ச்சிகளில் 20 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி பொது இடங்களில் மது, புகையிலைப் பொருட்கள் பயன்படுத்த தடை, மத நிகழ்வுகளுக்கு அனுமதி கிடையாது

கண்டெய்ண்மெண்ட் ஜோன்
கட்டுப்பாட்டு பகுதிகளில் அடிப்படை சேவைகளுக்கு மட்டும் அனுமதி. அடிப்படை தேவை இல்லாத விஷயங்களுக்கு மக்கள் வெளியே வர தடை.. கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக கட்டுப்பாடுகள் தொடரும் . ஆரோக்ய சேது செயலியை அலுவலகம் செல்லும் நபர்கள் கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் எப்போதும் போல மாநிலங்களுக்கு இடையே செல்ல அனுமதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications