20 லட்சம் கோடிப்பே.. அதுல எத்தனை "முட்டை" இருக்கு தெரியுமா.. இதுதாங்க டிரெண்டிங் இப்போ!
சோஷியல் மீடியாவில் 20 லட்சம் கோடி எண்கள் டிரெண்டாகி வருகிறது
டெல்லி: இதையெல்லாம் கூட இப்ப டிரெண்டிங் ஆக்க ஆரம்பிச்சுட்டாங்க பாருங்க. பிரதமர் நரேந்திர மோடி ரூ. 20 லட்சம் கோடி என்று அறிவித்தாரே.. அதை வைத்து இப்போது டிரண்டிங் ஆக்கி விட்டனர்.
Recommended Video
எதை டிரண்ட் ஆக்கியுள்ளனர் தெரியுமா.. அந்த 20 லட்சம் கோடியில் எத்தனை சைபர் இருக்கிறது என்பதுதான் அந்த தேடல். ஆமா, கூகுளில் இதைத்தான் அதிகம் பேர் தேடியுள்ளனர்.

ஒரு லட்சம் ரூபாயில் எத்தனை சைபர் இருக்கு என்றே பலருக்கு தெரியாது. இந்த நிலையில் 20 லட்சம் கோடி என்று சொல்லி விட்டு போய் விட்டார் பிரதமர்.. அவ்வளவுதான் பாதி ஜனம் அப்படியே நிலை குலைஞ்சு போயிருச்சு.. இவ்வளவு பெரிய பணமா என்று பலரும் வாயைப் பிளந்து விட்டனர். பரவாயில்லையே பிரதமர் அதிரடியாக களம் இறங்கி விட்டாரே என்றும் பலருக்கு குஷிதான்.
ஆனால் முதல்ல இந்த 20 லட்சம் கோடி ரூபாயில் எத்தனை சைபர் இருக்குன்னு பார்ப்போம் என்று ஒரு குரூப் கிளம்பி விட்டது. நெட் முழுக்க அவர்கள் தேடித்தேடி அதை இப்போது வைரலாக்கி விட்டனர்.
உண்மையில் இது எதிர்பாராத தேடல்தான். பலருக்கும் இந்த நம்பரை எப்படி எழுதுவது என்பதில் தடுமாற்றம் வரத்தான் செய்யும். எனவேதான் கூகுளில் போய் தேடியுள்ளனர். சரி உங்களுக்காவது விடை தெரியுமா.. 20 லட்சம் கோடியில் மொத்தம் 13 சைபர்கள் உள்ளன. அதாவது.. 20,000,000 000,000 .. இதுதான் அந்த 20 லட்சம் கோடி. இதைத்தான் பலரும் கூகுளில்தேடி கண்டுபிடித்துள்ளனர்.
அதாவது ஆயிரம் ரூபாய்க்கு மொத்தம் 3 சைபர் வரும். அதுவே பத்தாயிரம் என்றால் 4 சைபர், 1லட்சம் என்றால் 5 சைபர், பத்து லட்சம்னா 6 சைபர், ஒரு கோடி என்றால் 7 சைபர், 10 கோடி என்றால் 8 சைபர், 100 கோடி என்றால் 9 சைபர் வரும். 1000 கோடி என்று எடுத்துக் கொண்டால் அதற்கு ஒன்று போட்டு 10 சைபர் போட வேண்டும். இதுவே பத்தாயிரம் கோடி என்றால் 11 சைபர் வரும். ஒரு லட்சம் கோடிக்கு 12 சைபர் வரும். அப்படியானால் 10 லட்சம் கோடிக்கு.. கரெக்ட்.. 13 சைபர் வரும்.. நீங்க கணக்குல பாஸ் ஆயிட்டீங்க!!
நம்ம ஊரில்தான் இதை 20 லட்சம் கோடி என்று இழுத்துப் பிடித்துச் சொல்கிறோம்.. இதுவே அமெரிக்காவாக இருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள் தெரியுமா.. "10 டிரில்லியன்".. அவ்வளவுதான்.. ரத்தினச் சுருக்கமா சொல்லிட்டுப் போயிட்டே இருப்பாங்க. நம்ம ஊர் நம்பர் முறையும், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கடைப்பிடிக்கப்படும் நம்பர் முறையும் வேறு வேறு என்பதால் இப்படி.
சரி அதை விடுங்க.. ஈஸியா கண்டுபிடிச்சாச்சு.. இதே 20 லட்சம் கோடி அமெரிக்க டாலரில் என்ன மதிப்பு தெரியுமா.. போய் கண்டுபிடிச்சு அதை டிரெண்டாக்கலாம் வாங்க.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications