டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

லோக்சபா தேர்தல் 2019 முதற்கட்ட வாக்குப்பதிவு LIVE: உபி.யில் 50.86% வாக்குப்பதிவு

Google Oneindia Tamil News

Recommended Video

    Lok Sabha Election : முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.. 91 தொகுதிகளில் பலப்பரீட்சை

    லோக்சபா தேர்தலுடன் சேர்த்து மொத்தம் நான்கு மாநில சட்டசபை தேர்தலும் இன்று பெரிய அம்சபாவிதங்கள் ஏதுமின்றி நடந்து முடிந்தது. காலை 7 மணிக்கு துவங்கிய லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவு பெற்றது.

    இன்று நாடு முழுக்க முதல் கட்ட லோக்சபா தேர்தல் நடந்தது. மொத்தம் 91 தொகுதிகளில் முதற்கட்டமாக இந்த தேர்தல் நடைபெற்றது. மொத்தம் 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் தேர்தல்கள் நடந்தன.

    இதேபோல லோக்சபா தேர்தலுடன் ஆந்திரா, சிக்கிம், அருணாசலப்பிரதேசம், ஒடிசா (சில தொகுதிகள்) ஆகிய சட்டசபைக்கும் இன்றுதான் தேர்தல் நடந்தது. இதுகுறித்து முக்கிய அம்சங்களை இந்த லைவ் பக்கத்தில் பாருங்கள்.

    Newest First Oldest First
    6:04 PM, 11 Apr

    லோக்சபா தேர்தல்

    லோக்சபா தேர்தல்
    முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

    91 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவு

    ஆந்திரா, சிக்கிம், அருணாச்சல், ஒடிசாவில் சட்டசபை தேர்தலும் நிறைவு

    4:09 PM, 11 Apr

    டெல்லி

    லோக்சபா தேர்தல்: உத்தர பிரதேசத்தில் 50.86% வாக்குப்பதிவு

    நாகாலாந்தில் 68% வாக்குப்பதிவு

    தெலுங்கானாவில் 48.9% வாக்குப்பதிவு

    அசாமில் 59% வாக்குப்பதிவு

    மேகாலயாவில் 55% வாக்குப்பதிவு

    12:58 PM, 11 Apr

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர தேர்தலில் வன்முறையில் இருவர் பலி

    தெலுங்குதேசம்- ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல்

    அனந்தபூர் மாவட்டம், தாடிபத்திரிக்குட்பட்ட வீராப்புரத்தில் மோதலால் ஒருவர் பலி

    வரிசையில் இருந்த வாக்காளர்களிடம் தங்கள் கட்சிக்கு வாக்களிக்க இருதரப்பும் வலியுறுத்தியதால் மோதல்

    மோதலில் பலத்த காயமடைந்த சித்தா பாஸ்கர ரெட்டி பலியாகினார்

    12:21 PM, 11 Apr

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தேர்தல் ஆணைய அதிகாரி அலுவலகம் முன் தர்ணா

    ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த கோரி தர்ணா போராட்டம்

    ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு

    கோளாறு காரணமாக மறுதேர்தல் நடத்த கோரிக்கை

    11:31 AM, 11 Apr

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசம்
    ஆந்திராவில் மறுதேர்தல் நடத்த வேண்டும் - முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை

    ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு

    எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு நடப்பதில் பிரச்சனை

    எந்திர கோளாறு காரணமாக மறுதேர்தல் நடத்த கோரிக்கை

    11:12 AM, 11 Apr

    உத்தர பிரதேசம்

    உ.பியில் தேர்தல் அதிகாரிகளுக்கு ''நமோ'' பெயர் பொறித்த உணவு பார்சல் வழங்கப்பட்டது

    போலீஸ் அதிகாரிகளே உணவு பொட்டலங்களை வழங்கியதால் பரபரப்பு

    வாக்காளர்களுக்கும் நமோ உணவு பார்சல் வழங்கப்பட்டுள்ளது

    10:00 AM, 11 Apr

    லோக்சபா தேர்தல்

    லோக்சபா தேர்தல்: தெலுங்கானாவில் 10.6% வாக்குப்பதிவு

    அந்தமான் மற்றும் நிக்கோபாரில் 5.83% வாக்குப்பதிவு

    அசாமில் 10.2% வாக்குப்பதிவு

    அருணாசலப்பிரதேசத்தில் 13.3% வாக்குப்பதிவு

    9:26 AM, 11 Apr

    மேற்கு வங்கம்

    தள்ளாத வயதிலும் கடமையை செய்ய வந்த மூத்த குடிமகன்

    மே.வங்கத்தில் 90 வயதை தாண்டிய முதியவர் யார் துணையும் இன்றி வாக்களித்தார்

    நாட்டிலேயே மேற்கு வங்கத்தில் தான் முதல் தலைமுறை வாக்காளர்கள் அதிகம்

    20 லட்சம் முதல்தலைமுறை வாக்காளர்களின் கடமையை உணர்த்திய முதியவர்

    9:20 AM, 11 Apr

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு

    வாக்களிக்க முடியாததால் அதிகாரிகளுடன் வாக்காளர்கள் சண்டை

    கோபத்தில் வாக்குபதிவு எந்திரத்தை வாக்காளர்கள் உடைத்ததால் பரபரப்பு

    8:45 AM, 11 Apr

    ஆந்திர பிரதேசம்

    ஜன சேனா கட்சி வேட்பாளர் மதுசூதன் வாக்குபதிவு எந்திரத்தை உடைத்ததால் பரபரப்பு

    அனந்தப்பூர் தொகுதியில் வாக்களிக்கும் போது எந்திரத்தை உடைத்து நொறுக்கினார்

    வாக்குப்பதிவு எந்திரத்தில் தனது பெயர் சரியாக இல்லை என்று கூறி சண்டை

    8:37 AM, 11 Apr

    உத்தர பிரதேசம்

    உ.பியில் ஜே.பி ஜெயின் டிகிரி கல்லூரியில் விறுவிறு வாக்குப்பதிவு நடந்து வருகிறது
    8:20 AM, 11 Apr

    உத்தர பிரதேசம்

    உ.பியில் பாராட் வாக்குச்சாவடியில் வாக்காளர்களுக்கு சிறப்பு மரியாதை

    மலர்தூவி, மேளதாளங்கள் முழங்க வாக்காளர்களுக்கு வரவேற்பு

    8:19 AM, 11 Apr

    மேகாலயா

    மேகாலயா
    மேகாலயாவில் வாக்காளர்களுக்கு பதக்கம் வழங்கி கௌரவம்

    அதிகாலையிலேயே சென்று முதலில் வாக்களித்த 5 வாக்காளர்களுக்கு பதக்கம்

    8:03 AM, 11 Apr

    ஆந்திர பிரதேசம்

    ஆந்திர பிரதேசம்
    ஆந்திராவில் பல வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு

    எந்திர கோளாறு காரணமாக வாக்குபதிவு தொடங்குவதில் தாமதம்

    குண்டூர், அனந்தப்பூர், கோதாவரியில் வாக்குபதிவு எந்திரத்தில் கோளாறு

    7:38 AM, 11 Apr

    டெல்லி

    லோக்சபா தேர்தல்: நாடு முழுக்க பாதுகாப்பு பணிகள் தீவிரம்

    அசம்பாவிதங்களை தவிர்க்க 80 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

    துணை ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ், மாநில போலீஸ், சிஆர்பிஎப் களமிறக்கப்பட்டுள்ளனர்

    7:27 AM, 11 Apr

    மோடி வேண்டுகோள்

    இளம் மற்றும் முதல் தலைமுறையினர் தவறாது வாக்களிக்க வேண்டும்: பிரதமர் மோடி

    முதல்கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் அனைவரும் திரளாக வந்து வாக்களியுங்கள்

    மக்களவை தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கும் நிலையில் வேண்டுகோள்

    நாடு முழுவதும் 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் 91 தொகுதிகளுக்கு இன்று தேர்தல்

    7:03 AM, 11 Apr

    லோக்சபா தேர்தல் 2019

    முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
    4:49 AM, 11 Apr

    மிசோரம்

    1 தொகுதி - தொகுதியின் பெயர்- மிசோரம்
    4:49 AM, 11 Apr

    நாகாலாந்து

    1 தொகுதி- தொகுதி பெயர்- நாகலாந்து
    4:49 AM, 11 Apr

    சிக்கிம்

    1 தொகுதி - தொகுதி பெயர் - சிக்கிம்
    4:49 AM, 11 Apr

    லட்சதீவு

    1 தொகுதி- தொகுதி பெயர் - லட்சத்தீவு

    அந்தமான் நிகோபார்

    1 தொகுதி - தொகுதி பெயர்- அந்தமான் நிகோபார் தீவுகள்

    4:48 AM, 11 Apr

    மேகாலயா

    2 தொகுதிகள் (அனைத்து தொகுதிகளும்) ஷில்லாங், துரா

    அருணாச்சல பிரதேசம்

    2 தொகுதிகள் (அனைத்து தொகுதிகளும்)

    அருணாச்சல் மேற்கு, அருணாச்சல் கிழக்கு

    4:48 AM, 11 Apr

    தெலுங்கானா

    17 தொகுதிகள் (அனைத்து தொகுதிகளும்) - அடிலாபாத், பெட்டபல்லே, கரீம்நகர், நிசாமாபாத், ஜஹீராபாத், மேதக், மல்கஜ்கிரி, செகந்திராபாத், ஹைதராபாத், செவெல்லா, மகபூப்நகர், நாகர்கர்நூல், நல்கொண்டா, பாங்கிர், வாரங்கல், மகபுபாபாத், கம்மம்
    4:48 AM, 11 Apr

    ஆந்திரப் பிரதேசம்

    25 தொகுதிகள் (அனைத்து தொகுதிகளும்) அரகு, ஸ்ரீகாகுளம், விசாகபட்டினம், அனகாபள்ளி, காக்கிநாடா, அமலாபுரம், ராஜமுந்திரி, நரசாபுரம், இலுரு, மசிலிபட்டிணம், விஜயவாடா, குண்டூர், நரசரபேட், பாப்டாலா, ஓங்கோல், நந்யால், கர்னூல், அனந்தபூர், ஹிந்துபுர், கடப்பா, நெல்லூர், திருப்பதி, ராஜம்பேட், சித்தூர்.
    4:47 AM, 11 Apr

    திரிபுரா

    1 தொகுதி- திரிபுரா மேற்கு

    4:47 AM, 11 Apr

    அசாம்

    5 தொகுதிகள்- தேஜ்பூர், கலிபோர், ஜோர்கட், திப்ருகர், லக்கிம்பூர்
    4:47 AM, 11 Apr

    ஒடிசா

    4 தொகுதிகள்- காந்தாந்தி, நபாரன்பூர், பெர்ஹாம்பூர், கோராபுட்
    4:46 AM, 11 Apr

    ஜம்மு காஷ்மீர்

    2 தொகுதிகள்- பாராமுல்லா, ஜம்மு
    4:46 AM, 11 Apr

    சத்தீஸ்கர்

    1 தொகுதி- பஸ்தார்
    4:46 AM, 11 Apr

    மேற்கு வங்கம்

    2 தொகுதிகள்- கூச் பெஹர் மற்றும் அலிபூர் துர்
    READ MORE

    lok sabha election 2019 phase 1 polling live updates

    English summary
    First phase of Lok Sabha Election 2019 will be held on April 11, Thursday, on 91 seats and voters will be choosing their representatives from nearly 1,300 candidates. Before the first phase of the national election, the Association for Democratic Reform (ADR), a non-governmental organisation that works towards electoral and political reforms, has released a report identifying the richest and poorest candidates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X