2 கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு? அதிகாரப்பூர்வமாக அறிவித்தது தேர்தல் ஆணையம்
டெல்லி: முதல் 2 கட்ட தேர்தலில் பதிவான வாக்கு சதவிகிதம் எவ்வளவு என்பது குறித்து தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும் 2-ஆம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
நாட்டின் 18 வது லோக்சபா நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. ஏப்ரல் 19, ஏப்ரல் 26-ல் முதல் 2 கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. ஜூன் 1-ந் தேதி வரை எஞ்சிய 5 கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.

முதல் கட்ட தேர்தல்: முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்றது. 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அருணாசல பிரதேசம்( 2 தொகுதிகள்), அசாம் (5), பீகார் (4), சத்தீஷ்கர் (1) மத்திய பிரதேசம் (6), மகாராஷ்டிரா (5), மணிப்பூர் (02), மேகலாயா (02), மிசோரம் (1), நாகலாந்து (1), ராஜஸ்தான் (12), சிக்கிம் (1), தமிழ்நாடு (39), புதுவை (1) உத்தர பிரதேசம் (8), உத்தரகாண்ட் (05), மேற்கு வங்காளம் (03), அந்தமான் நிகோபார் தீவுகள் (1), ஜம்மு காஷ்மீர் (1) என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நடைபெற்றது.
2ம் கட்ட தேர்தல்: அதேபோல், 2 ஆம் கட்டமாக 13 மாநிலங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு கடந்த 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், அசாம் (05), பீகார் (05), சத்தீஷ்கர் (03), கர்நடகா (14), கேரளா (20), மத்திய பிரதேசம் (06), மகராஷ்டிரா (08), மணிப்பூர் (1) , ராஜஸ்தான் (13), திரிபுரா (1), உத்தரபிரதேசம் (08), மேற்கு வங்காளம் (3), ஜம்மு காஷ்மீர் (01) என 88 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்கு சதவிகிதம்: பெரிய அளவில் அசம்பாதவிதங்கள் எதுவும் இன்றி இந்த இரண்டு கட்ட தேர்தல்களும் அமைதியாக நடைபெற்று முடிந்தன. இந்த நிலையில், தேர்தல் முடிந்து பல நாட்களுக்கு பிறகு 2 கட்ட தேர்தலிலும் பதிவான வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி, முதல் கட்ட தேர்தலில் 66.14 சதவிகித வாக்குகளும் 2 ஆம் கட்ட தேர்தலில் 66.71 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
2019-இல் எப்படி?: கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்த 2019ல் முதல் கட்ட தேர்தலில் 69.43 சதவிகிதமும் இரண்டாம் கட்ட தேர்தலில் 69.17 சதவிகித வாக்குகளும் பதிவாகியிருந்தன.
வாக்காளர்கள் எத்தனை பேர்?: 2024 லோக்சபா தேர்தலில் முதல் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 66.22 சதவிகிதம் பேரும் பெண் வாக்காளர்கள் 66.07 சதவிகிதம் பேரும், மூன்றாம் பாலினத்தவர் 31.32 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர். 2-ஆம் கட்ட தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 66.99 சதவிகிதம் பேரும் பெண்வாக்காளர்கள் 66.42 சதவிகிதம் பேரும், மூன்றாம் பாலினத்தவர் 23.86 சதவிகிதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications