Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛காங்கிரசுக்கு முட்டை’.. குஜராத், ராஜஸ்தான், இமாச்சலை ஸ்வீப் செய்யும் பாஜக! ஏபிபி - சிவோட்டர் சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வரும் லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் அனைத்து தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும். இதன்மூலம் கொத்தாக 55 தொகுதிகளை பாஜக அள்ளும். அதேவேளையில் 3 மாநிலங்களில் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என ஏபிபி நியூஸ் மற்றும் சி வோட்டர் மேற்கொண்ட கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தல் தொடர்பாக பல்வேறு கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் ஏபிபி நியூஸ் - சிவோட்டர் இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

Lok Sabha Election 2024 BJP may sweeps Gujarat Rajasthan and Himachal pradesh says ABP - C Voter opinion poll

அந்த வகையில் பாஜக ஆட்சியில் இருக்கும் குஜராத், ராஜஸ்தான் மற்றும் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக இந்த 3 மாநிலங்களை மொத்தமாக பாஜக ஸ்வீப் செய்யும் என கூறப்பட்டுள்ளது.

குஜராத்: அதன்படி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக அனைத்து இடங்களிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் மொத்தம் 26 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் கடந்த 2019 தேர்தலில் பாஜக அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றது.

அதேபால் வரும் நாடாளுமன்ற தேர்தல்களிலும் 26 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குஜராத்தை பொறுத்தமட்டில் பாஜக 64 சதவீத ஓட்டுகளை பெறும் எனவும், காங்கிரஸ் தலைமையிலான ‛இந்தியா' கூட்டணிக்கு 35 சதவீத ஓட்டுகள் மட்டுமே கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான்: அதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 25 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பாஜக தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாஜகவுக்கு 60 சதவீத ஓட்டு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாறாக காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் ‛இந்தியா' கூட்டணிக்கு 39 சதவீத ஓட்டுகள் கிடைத்தாலும் கூட ஒரு சீட் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தான் 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. மீண்டும் பாஜகவே அத்தனை தொகுதிகளிலும் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது. மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ள நிலையில் பாஜக 115 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. காங்கிரஸ் வெறும் 69 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இமாச்சல பிரதேசம்: கடந்த 2023ம் ஆண்டு இறுதியில் இமாச்சல பிரதேசம் நடந்த சட்டசபை தேர்தலில் பாஜக தோல்வியடைந்தது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இருப்பினும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் பாஜக தான் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் கங்க்ரா, ஹமிர்பூர், சிம்லா ஆகிய தொகுதிகளில் பாஜகவும், மாண்டி தொகுதியில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த முறை 4 தொகுதிகளிலும் பாஜக தான் வெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இமாச்சல பிரதேசத்தை பொறுத்தமட்டில் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக 65 சதவீத ஓட்டுகளையும், காங்கிரஸ் கட்சி 32 சதவீத ஓட்டுகளை மட்டுமே பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பு அப்படியே நடக்கும் பட்சத்தில் குஜராத், ராஜஸ்தான், இமாச்சல பிரதேசம் ஆகிய 3 மாநிலங்களில் இருந்து பாஜகவுக்கு கொத்தாக 55 தொதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+