கங்கனா ரனாவத், ராகுலின் சித்தி மேனகா காந்தி போட்டி.. வெளியானது பாஜகவின் 5வது வேட்பாளர் பட்டியல்
டெல்லி: பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் ராகுல் காந்தியின் சித்தி மேனகா காந்திக்கும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலுக்கான பாஜகவின் 5ம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியானது.

இதில் ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் உள்ள 111 லோக்சபா தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி தொகுதியில் கங்கனா ரனாவத் களமிறக்கப்பட்டுள்ளார். அதேபோல் ராகுல் காந்தியின் சித்தியான மேனகா காந்திக்கு (ராஜீவ் காந்தியின் தம்பி சஞ்சய் காந்தியின் மனைவி) உத்தர பிரதேச மாநிலம் சுல்தான்பூர் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார். இந்நிலையில் தான் ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் சுரேந்திரன் வேட்பாளராக போட்டியிட இருக்கிறார். ஒடிசாவின் சாம்பல்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் போட்டியிட உள்ளார். பீகார் மாநிலம் பாட்னா சாஹிப் தொகுதியில் ரவி சங்கர் பிரசாத் போட்டியிடுகிறார்.
கர்நாடகாவை பொறுத்தவரை பெலகாவி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ெஷட்டர் போட்டியிடுகிறார். கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை என அவர் காங்கிரஸில் இணைந்தார். அதன்பிறகு மீண்டும் பாஜகவுக்கு தாவிய நிலையில் அவர் பெலகாவி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் உத்தர கன்னடா தொகுதியில் 6வது முறையாக எம்பியாக இருந்து வரும் அனந்தகுமார் ஹேக்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர் சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். இந்திய அரசியலமைப்பு சட்டம் மாற்றம் செய்யப்படும், இந்தியா இந்து நாடு என பலமுறை சர்ச்சையான கருத்துகளை தெரிவித்து வந்தார். இந்நிலையில் தான் அனந்தகுமார் ஹேக்டேவுக்கு பதில் உத்தர கன்னடா தொகுதியில் பாஜக வேட்பாளராக விஷ்வேஸ்வரா ஹேக்டே காகேரி அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகா சட்டபையின் முன்னாள் சபாநாயகர் ஆவார்.
மேலும் சிக்கபள்ளாப்பூரில் முன்னாள் அமைச்சர் சுதாகருக்கு வாயப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ராய்ச்சூரில் ராஜா அமரேஷ்வரா நாயக் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தற்போது வெளியான இந்த 5வது வேட்பாளர் பட்டியலில் ஆந்திரா மாநிலத்தின் 6 தொகுதி, பீகார் மாநிலத்திலன் 17 தொகுதி, கோவாவின் ஒரு தொகுதி, குஜராத்தின் 6 தொகுதிகளுக்ஹரியானாவில் 4 தொகுதி, இமாச்சல பிரதேசத்தின் 2 தொகுதி, ஜார்கண்ட்டின் 3 தொகுதி, கர்நாடகா, கேரளாவில் தலா 4 தொகுதி, மகாராஷ்டிராவின் 3 தொகதி, மிசோரமின் ஒரு தொகுதி, ஒடிசாவின் 18 தொகுதி, ராஜஸ்தானின் 7 தொகுதி, சிக்கிமின் ஒரு தொகுதி, தெலுங்கானாவின் 2 தொகுதி, உத்தர பிரதேசத்தின் 13 தொகுதிகள் என மொத்தம் 111 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
-
சாத்தூரில் பாஜக ஜெயித்ததே இல்லை.. நயினாருக்கு காத்திருக்கும் சவால்! அதிக முறை வென்றது யாரு தெரியுமா? -
Vanathi Srinivasan: முகத்தில் சோகம்.. வானதி சீனிவாசன் திடீர் வீடியோ.. மருத்துவமனை பெட்டில் இருந்தபடி உருக்கம் -
அதிருப்திக்கு நடுவே.. திடீரென தமிழகம் மீது போகஸை திருப்பிய மோடி! நாளை முக்கிய மீட்டிங்.. பின்னணி -
அமித் ஷாவின் அதிரடி 30.. மோடி-யோகியின் 11:11 வியூகம்.. மம்தா கோட்டையை தகர்க்க மெகா பிளானில் பாஜக -
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள்












Click it and Unblock the Notifications