ஆம் ஆத்மியை க்ளீன் ஸ்வைப் செய்த பாஜக! 7 தொகுதியில் வெற்றி? இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது உள்ளிட்ட பல்வேறு பரபரப்பான அரசியல் சூழல்களுக்கிடையே டெல்லியில் 7 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் நிறைவு பெற்றிருக்கும் நிலையில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற வாய்ப்புள்ளதாக இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய கருத்துக்கணிப்பு தகவல் வெளியாகி உள்ளது.
நாட்டின் தலைநகர் மட்டுமில்லாமல் நாட்டின் மிகப்பெரிய நகராகவும் தனி யூனியன் பிரதேசமாகவும் டெல்லி விளங்குகிறது. 2012 வரை பாஜகவும் காங்கிரசும் மாறி மாறி டெல்லியை ஆண்டு நிலையில் 2013 முதல் ஆம் ஆத்மி ஆட்சியை கைப்பற்றி இருக்கிறது.

இந்த நிலையில் எதிர் துருவங்களாக இருந்த ஆம் ஆத்மியும் காங்கிரசும் தற்போது மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கிறது.
இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் நிலையில் ஆம் ஆத்மி கட்சியும் காங்கிரசும் இந்தியா கூட்டணியில் இணைந்து போட்டியிடுகின்றன. ஆம் ஆத்மி கட்சி நான்கு தொகுதிகளிலும் காங்கிரஸ் மூன்று தொகுதிகளிலும் போட்டியிட்ட நிலையில் மே 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
தேர்தல் முன்னரே வந்த கருத்து கணிப்புகளில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளிவந்துள்ள இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பின்படி பாஜக ஆறு முதல் ஏழு தொகுதிகளில் வெல்லும் எனவும் ஆம் ஆத்மி காங்கிரஸ் கூட்டணி பூஜ்ஜியம் முதல் ஒரு தொகுதியில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
2019 தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் தனித்தே களம் கண்டன. ஆனாலும் 56 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக ஏழு தொகுதிகளையும் வென்றது. ஆளுங்கட்ச்சியாக இருந்த ஆம் ஆத்மி 18 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் 22 சதவீத வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
2014 மக்களவைத் தேர்தலிலும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி தனித்தே களம் கண்டன. மொத்தமுள்ள ஏழு தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது. அந்த கட்சி அப்போது 46 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது. ஆம் ஆத்மி சுமார் 33 சதவீத வாக்குகளையும் காங்கிரஸ் பதினைந்து சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தன. இந்த நிலையில் கடந்த தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் பாஜகவே பெருவெற்றி பெரும் என இந்திய டுடே ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications