பிரஜ்வலால் பாதிப்பில்லை.. கர்நாடகாவில் பாஜக கூட்டணிக்கு 25 தொகுதிகள்: இந்தியா டுடே கணிப்பு
டெல்லி: லோக் சபா தேர்தல் 2024 முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில், இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளின் படி கர்நாடகாவில், பாஜக 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 3 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கணித்துள்ளது.
இந்தியாவின் 18 வது மக்களவைக்கு 543 மக்களவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தொடங்கி இன்று வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.

ஏழாம் கட்ட வாக்குப்பதிவு பீகார், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேசத்தில் காலை 7:00 மணிக்கு தொடங்கி நிலையில் 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது
இந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் இந்தியா டுடே - ஆக்சிஸ் மை இந்தியா நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்தியா டுடே-ஆக்சிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 5.8 லட்சம் மக்களிடையே நடத்தப்பட்டது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பின் படி கர்நாடகாவில், பாஜக கூட்டணி 23 முதல் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் எனவும், காங்கிரஸ் 3 முதல் 5 தொகுதிகளில் மட்டுமே வெல்லும் என கணித்துள்ளது. கர்நாடகாவில் உள்ள 28 தொகுதிகளில் பாஜக 25 தொகுதிகளை கடந்த முறை வென்றது குறிப்பிடத்தக்கது. மஜத 1 வென்றிருந்தது. இம்முறை தேவகவுடாவின் மஜத பாஜக கூட்டணியில் உள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்?











Click it and Unblock the Notifications