லோக்சபா தேர்தலுக்கு முந்தைய காலிறுதி கேம்-4: தென்னிந்தியாவின் ஒரே மாநிலம் கர்நாடகாவையும் இழந்த பாஜக!
டெல்லி: தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முந்தைய இறுதி ஆட்டம்- செமி பைனல் போல இந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பார்க்கப்படுகின்றன. லோக்சபா தேர்தலுக்கான காலிறுதி ஆட்டமாக கருதப்படும் கர்நாடகா தேர்தலில் என்ன நடந்தது?
கர்நாடகாவில் மொத்தம் 224 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 113 இடங்கள். கர்நாடகாவில் காங்கிரஸ், பாஜக, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் பிரதான அரசியல் கட்சிகளாக களத்தில் இருக்கின்றன.

2018-ம் ஆண்டு கர்நாடகா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபைதான் அமைந்தது. பாஜக 104, காங்கிரஸ் 80, மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களில் வென்றன. இதனையடுத்து காங்கிரஸும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் இணைந்து 117 எம்.எல்.ஏக்களுடன் புதிய கூட்டணி ஆட்சியை அமைத்தது.
ஆட்சி கவிழ்ப்பும் பாஜக அரசும்: கர்நாடகா முதல்வராக குமாரசாமி பதவி ஏற்றார். ஆனால் 2019-ல் கட்சி தாவல்கள், எம்.எல்.ஏக்கள் ராஜினாமா களேபரங்களால் காங்கிரஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து கர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைத்தது. தென்னிந்தியாவிலேயே கர்நாடகாவில் மட்டும்தான் பாஜக செல்வாக்கு பெற்றிருக்கிறது.
2003 தேர்தல் முடிவுகள்: இந்தப் பின்னணியில் 2023-ம் ஆண்டு மே மாதம் கர்நாடகா சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக மிக மோசமான தோல்வியைத் தழுவியது. அதேபோல மதச்சார்பற்ற ஜனதா தளமும் பெரும் பின்னடைவை சந்தித்தது. 2023 தேர்தலில் காங்கிரஸ் 135 இடங்களிலும் பாஜக 66 இடங்களிலும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 17 இடங்களிலும் வென்றன. பெரும்பான்மைக்கு தேவையான இடங்களைவிட கூடுதல் இடங்களைப் பெற்று பாஜக ஆட்சி அமைத்துள்ளது காங்கிரஸ்.
தேர்தல் வாக்குறுதிகள்: கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க காரணமாக இருந்தது அதிரடியான தேர்தல் வாக்குறுதிகள்தான். இதனால் ஆட்சியில் அமர்ந்த உடனேயே காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் செய்தது. இந்த பார்முலாவைத்தான் அப்படியே தெலுங்கானா மாநிலத்திலும் காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது.
தெலுங்கானாவில் கை கொடுக்குமா?: கர்நாடகா மாநில மக்கள் தேர்தல் வாக்குறுதிகளை நம்பி காங்கிரஸுக்கு வாக்களித்தனர். தெலுங்கானாவிலும் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்கின்றன களநிலவரங்கள். இதனால் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்கிற பெருநம்பிக்கையில் அக்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர். தற்போதைய அரை இறுதி ஆட்டமான செமிபைனல் தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் இந்த பார்முலாவை காங்கிரஸ் இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறது. இது கை கொடுத்தால் லோக்சபா தேர்தலுக்கும் இதே வியூகத்தை காங்கிரஸ் கையில் எடுக்கும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications