2024 லோக்சபா தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும்.. தமிழ்நாட்டில் எப்படி? 2019 அட்டவணை முழு விவரம்
டெல்லி: லோக்சபா தேர்தல் 7 முதல் 8 கட்டங்களாக நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. எனவே, இம்முறையும் அதேபோலவே தேர்தல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டு இருந்த லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இன்று பிற்பகல் 3 மணியளவில் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. டெல்லியில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடைபெறும் பத்திரிகையாளர் சந்திப்பில் தேர்தல் ஆணையர்கள் தேர்தல் தேதியை அறிவிக்கிறார்கள்.

வரும் ஏப்ரல், மே மாதங்களில் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 லோக்சபா தொகுதிகளுக்கு 7 அல்லது 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. நாடு முழுவதும் 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 97 கோடி பேர் 18-வது லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியானவர்கள்.
தமிழகத்தில் எப்படி?: தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா, குஜராத், ஹரியானா, தெலுங்கானா, புதுவை உள்ளிட்ட மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் 6 முதல் 7 கட்டங்களாகவும் 48 தொகுதிகளை கொண்ட மகராஷ்டிராவில் 4 முதல் 5 கட்டங்களாகவும் தேர்தல் நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.
கடந்த தேர்தலில் எப்படி?: மேற்கு வங்க மாநிலத்தில் 6 கட்டங்கள் வரையும் தேர்தல் நடத்தப்படலாம் என்று தெரிகிறது. வாக்கு எண்ணிக்கையை பொறுத்தவரை மே மாத இறுதி அல்லது ஜூன் மாத தொடக்கத்தில் வாக்கு எண்ணிக்கை நடத்தப்படலாம் என்று தெரிகிறது. ஏப்ரல் 16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இன்று பிற்பகல் 3 மணிக்கு மேல் லோக்சபா தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிந்து விடும்.
கடந்த 2019-லோக்சபா தேர்தலை பொறுத்தவரை 7 கட்டங்களாக நடைபெற்றது. ஏப்ரல் 11 முதல் மே 19 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற்றது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11 ஆம் தேதியும் 7-வது கட்ட தேர்தல் மே 19 ஆம் தேதியும் நடைபெற்றது. ஏப்ரல் 18-ம் தேதி நடைபெற்ற 2-வது கட்ட தேர்தலில் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.
எப்போது வாக்கு எண்ணிக்கை: மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. எனவே, 18-வது லோக்சபா தேர்தலும் 7 அல்லது 8 கட்டங்களாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தேர்தல் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துவிடும். தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தால் புதிய திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்க முடியாது. ஏற்கனவே அமலில் உள்ள திட்டங்களை செயல்படுத்த தடையில்லை.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications